பாகிஸ்தான் வீரர் ஹபீஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீதுள்ள கோபத்தினால் ஓய்வு முடிவை அறிவிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அநோயின் மூத்த வீரர்களுள் ஒருவரான முஹம்மத் ஹபீஸ், அந்த அணிக்கு சில காலம் கேப்டன் பொறுப்பிலும் இருந்துள்ளார். அவர் சில காலங்களாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதால் பாகிஸ்தான் முக்கிய அணியில் இருந்து பி வரிசை அணிக்கு தள்ளப்பட்டார்.
இப்படி பின்னுக்கு தள்ளுவது மூத்த வீரருக்கு தரும் மரியாதை அல்ல. இதனால் அவர் விரைவில் ஓய்வு பெற போவதாகவும் இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீதுள்ள கோபம் காரணமாகவே எனவும் தெரியவந்துள்ளது.
மூத்த வீரரை ஒட்டுமொத்தமாக ஒப்பந்தத்தில் இருந்து குறைத்து, பி வரிசை ஒப்பந்தத்திற்கு தள்ளுவதற்கான அவசியம் என்ன என்றும் வாரியம் தரப்பில் சரியான காரணங்கலும் கூறப்படவில்லை. இதனால், இந்த ஒப்பந்தத்தில் நான் கையெழுத்து இடப்போவதில்லை என்பதையும் தெளிவாக தெரியப்படுதியுள்ளார்.
இதற்கு பாகிஸ்தான் தரப்பு, ஹபீஸ் இதுவரை ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை எங்களுக்கும் அவருக்கும் போய்க்கொண்டு இருக்கிறது. விரைவில் இது தீர்க்கப்பட்டு அவருடன் சுமூக நிலை வரும் என கூறியுள்ளது.
ஹபீஸ் இந்த கோவத்திற்கு காரணம், அவர் ஜிம்பாப்வே தொடரில் இடம்பெற்று அடா தகுதி பெற்ற போதும் அவருக்கு மூத்த வீரர் என்று கூட பாராமல், ஒரு போட்டி கூட ஆட வாய்ப்பளிக்கவில்லை. 5 போட்டிகளிலும் வெளியிலேயே அமர்த்தப்பட்டார்.
அந்த தொடருக்கு பின், கீழ் தரவரிசைக்கு மோசமான ஆட்டத்தை காரணம் காட்டி தள்ளப்பட்டார்.
இதுபோன்று மூத்த வீரர்களை உதாசீன படுத்துவதால் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். மேலும், அவர் அந்த அணிக்கு முக்கிய கட்டங்களில் சிறப்பாக பங்கேற்றியுள்ளார். சிறந்த ஆல்ரவுண்டரும் கூட.
அடுத்த வருடம் உலககோப்பைக்கு முன்னாள் அணியில் இப்படி முரணான செயல்கள் நடந்தால் அது ஆரோக்கியமாக இருக்காது.