கொல்கத்தா அணியின் கேப்டனான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்தி இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்காவை சமாளிப்பது தான் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கர்த்திக்,ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன்.இவர் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்து வருகிரார்.இவருடைய அதிரடியான பேட்டிங்கின் மூலம் இந்திய அணிக்கு பல முரை வெற்றியை தேடிக்கொடுத்துள்ளார்
இன்ஸ்டாகிராமில் தினேஷ் கார்த்திக்கிடம், உங்களைத் திணற வைத்த பந்துவீச்சாளர் யார் என்ற ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தமிழகத்தை சார்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் பதில் அளித்ததாவது.

இரு வீரர்களும் தனது கிரிக்கெட் வரலாற்றில் அவ்வப்போது சந்தித்துக் கொண்டுள்ளனர்.அதில் தினேஷ் கார்த்திக் 53 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த நிலையில் லசித் மலிங்காவிடம் இருமுறை தனது விக்கெட்டை பறிகொடுத்து உள்ளார்.அதுவும் லசித் மலிங்கா வீசிய முதல் பந்திலேயே தனது விக்கெட்டை கொடுத்துள்ளார்.
அதேபோன்று ஐபிஎல் போட்டி தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சாளர் லசித் மலிங்கா வீசிய பந்தில் 17 பந்துகளுக்கு 12 ரன்கள் எடுத்த நிலையில் மூன்று முறை தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

லசித் மலிங்க ஒரு மிகச் சிறந்த பந்துவீச்சாளராக கிரிக்கெட் உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு திறமையான மற்றும் துல்லியமான பந்துவீச்சாளர்.பேட்ஸ்மேன்கள் இவரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்