இந்த முறை விராட் கோஹ்லியின் வழியை பின்பற்றிய சுரேஷ் ரெய்னா; வைரலாகும் புகைப்படம்
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. இவர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் தனக்கு முடி அதிகளவில் வளர்ந்துவிட்டதால் அவரின் மனைவி ஹேர்கட் செய்ய உதவியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக ரெய்னா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ இதற்கு மேல் காத்திருக்க முடியாது. எனக்கு உதவிய ப்ரியங்காவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். #ஹேர்கட் #டூஇட்யுவர்செல்ப்” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்காக ரெய்னா மொத்தமாக ரூ – 52 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
I could not wait any longer ?♂️? thanks for helping me @_PriyankaCRaina #haircut #doityourself pic.twitter.com/fPfnsXqne7
— Suresh Raina?? (@ImRaina) April 11, 2020
முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோஹ்க்கு அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா முடி வெட்டி விட்டார். அந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் வெளியே வரக்கூடாது என்பதால் மக்கள் தங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிவேகமாக பரவுவதால், ஊரடங்கு இன்னும் நீடிக்கப்படும் என் தெரிகிறது.