இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆட மாட்டார்! திடீரென ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர்! ரசிகர்கள் கவலை! 1

இந்திய உள்ளூர் கிரிக்கெட்டின் மூத்த வீரர் ரஜத் பாட்டியா அனைத்து விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்தும் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2000 முதல் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பித்த ரஜத் பாட்டியா, கடைசியாக 2018-19 சீசனில் உத்தரகண்ட் அணிக்காக விளையாடினார். 112 முதல் தர ஆட்டங்களில் விளையாடி 6482 ரன்கள் எடுத்துள்ளார்.

137 விக்கெட்டுகளும் எடுத்து நல்ல ஆல்ரவுண்டராக விளங்கினார். ஐபிஎல் போட்டியின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். 2008-ல் ராஜஸ்தான் அணியும் 2012-ல் கொல்கத்தா அணியும் ஐபிஎல் பட்டங்களை வென்றபோது அந்த அணிகளில் பாட்டியா இடம்பெற்றிருந்தார்.இந்த வருட ஐபிஎல் தொடரில் ஆட மாட்டார்! திடீரென ஓய்வை அறிவித்த நட்சத்திர வீரர்! ரசிகர்கள் கவலை! 2

ஐபிஎல் போட்டியில் சச்சினை மூன்று முறை வீழ்த்தியதை மறக்க முடியாது. 2012-ல் ஐபிஎல் கோப்பையை வென்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. ஐபிஎல் போட்டியில் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் என்னுடைய பந்துவீச்சை உயர்வாகக் கருதவில்லை. மிதமான வேகத்தில் பந்து வருவதால் என்னால் அவர்கள் விக்கெட்டை வீழ்த்த முடியாது என எண்ணினார்கள்.

இதனால் நான் 10 வருடங்கள் ஐபிஎல் போட்டியில் விளையாட முடிந்தது. என்னைப் பற்றி தவறாக எண்ணியவர்களின் எண்ணத்தை மாற்றியுள்ளேன் என்று 40 வயது பாட்டியா கூறியுள்ளார்.Points table can change quickly: Rajat Bhatia | Cricbuzz.com

146 டி20 ஆட்டங்களில் விளையாடி 1251 ரன்களும் 111 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் ஆடிய இவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்றே முடிவாகியுள்ளது. முன்னதாக ஏற்கனவே இவர் ஐபிஎல் தொடரில் ஏலத்திலும் தேர்வாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 40 வயதான இவர் டெல்லியை சேர்ந்தவர். தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்காகவும் ரஞ்சி கோப்பை தொடரில் ஆடியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *