ரோமானியாவை பிறப்பிடமாக கொண்ட பாவெல் ஃப்ளோரின் இப்போது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளார். 40 வயதான ஃப்ளோரின் 32 வயதில் தான் கிரிக்கெட் விளையாட வந்தார். 10 ஓவர்கள் கொண்ட போட்டியில் ஆடுவது இது முதல்முறை.
ரோமானியாவை பிறப்பிடமாக கொண்ட பாவெல் ஃப்ளோரின் இப்போது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளார். ஏனெனில், அவர் ஐரோப்பிய டி10 கிரிக்கெட் லீக்கில் வீசிய பந்துவீச்சு வைரலாகியுள்ளது. அவரின் செயல்பாடு மட்டுமல்லாது, அவர் பந்து வீசுவது எதிரில் இருக்கும் பேட்ஸ்மேனுக்கு எந்த பாதகமும் அமையாதவாறு இருந்தது.

ட்ரூக்ஸ் கிரிக்கெட் கிளப்பை எதிர்த்து ஆடிய க்ளஜ் கிரிக்கெட் க்ளப் அணியில் இடம்பெற்ற ஃப்லோரின் தன்னுடைய ஓவரின் முதல் பந்தை வைட் பந்தாக வீசினார். அதன்பின் வீசிய பந்துகள் அனைத்து சாதாரணமாக வீசினார். இப்படி அவர் பந்துவீசிய பிறகும், அந்த ஓவரில் பேட்ஸ்மேன் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ஃப்ளோரினின் பந்துவீச்சை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அவர், மற்றவர்கள் கூறிவதை பற்றி கவலைபட மாட்டேன். ஏனெனில் தான் கிரிக்கெட்டை விரும்புவதாக கூறினார்.
"My bowling is not beautiful. But I don't care, because I love cricket" Cluj Cricket Club Player President, Pavel Florin Representing his club at the Champions League of European cricket. pic.twitter.com/E1SRQb7qUr
— Dimi Mascarenhas (@dimimascarenhas) July 30, 2019
“என்னுடைய பந்துவீச்சை பலரும் கிண்டல் செய்யலாம், சரியில்லை என்று கூறலாம் ஆனால், அதை குறித்தெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன். ஏனெனில் நான் கிரிக்கெட்டை விரும்புகிறேன்,” என்றார்.
40 வயதான ஃப்ளோரின் 32 வயதில் தான் கிரிக்கெட் விளையாட வந்தார். 10 ஓவர்கள் கொண்ட போட்டியில் ஆடுவது இது முதல்முறை.
ஐரோப்பிய டி10 கிரிக்கெட் லீக் எட்டு அணிகள் கொண்ட தொடர், இரண்டாக பிரிக்கப்படுகிறது. க்ரூப் ஏ – க்ளஜ் கிரிக்கெட் க்ளப், ரோட்டர்டேம், சவன்ஹோம் மற்றும் ட்ரூக்ஸ் அணிகள் இடம்பெற்றுள்ளன.
க்ளஜ் கிரிக்கெட் க்ளப் இரண்டு ஆட்டங்களில் தோற்று, புள்ளிகள் ஏதுமில்லாமல் க்ரூப் ஏ அணியில் கடைசி இடத்தில் உள்ளது.
பாவெல் ஃப்ளோரின் அடுத்த போட்டியில் சவன்ஹோமை வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது. இந்தப் போட்டியில் பாவெல் ஃப்ளோரின் தோற்றால், தொடரில் இருந்து வெளியேற்றப்படும்.
Sorry skip… I've yipped up! ?♂️?♂️
? @EuropeanCricket pic.twitter.com/iPI0Rg4Fk5
— CricX ?? (@cricketagency) July 30, 2019