எம்.பியாக இருந்தும் கிரிக்கெட் மூலம் சம்பாதிப்பது ஏன்..? புதிய விளக்கம் கொடுத்த கவுதம் கம்பீர் !! 1

ஒரு எம்பியாக இருந்தும் நான் ஐபிஎல் தொடரில் பணிபுரிவதற்கான காரணம் இதுதான் என்று லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கௌதம் காம்பீர் 2022 ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் ஆலோசகராகவும் பணிபுரிகிறார்.எம்.பியாக இருந்தும் கிரிக்கெட் மூலம் சம்பாதிப்பது ஏன்..? புதிய விளக்கம் கொடுத்த கவுதம் கம்பீர் !! 2

பாரதிய ஜனதா கட்சியின் எம்பியாக இருக்கும் இவர், ஏன் ஐபிஎல் தொடரில் பணிபுரிய வேண்டும் என்ற சந்தேகம் ரசிகர்கள் உட்பட கம்பீரை தெரிந்த அனைவர் மனதிலும் எழும் ஒரு கேள்வியாக இருந்து வந்தது.

கிரிக்கெட் மீது இருக்கும் பற்றின் காரணமாக தான் அவர் ஓய்வு பெற்ற பின்பும்,இன்னும் ஒருபடி மேல் எம்பியான பின்பும் கிரிக்கெட் சம்பந்தமான அனைத்திலும் ஈடுபாடாக உள்ளார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.எம்.பியாக இருந்தும் கிரிக்கெட் மூலம் சம்பாதிப்பது ஏன்..? புதிய விளக்கம் கொடுத்த கவுதம் கம்பீர் !! 3

இந்த நிலையில் ஒரு எம்பியாக இருந்தும் தான் ஏன் ஐபிஎல் தொடரில் ஈடுபட்டுள்ளேன் என்பதற்கான பதிலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, “நான் ஏன் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராகவும் அல்லது ஐபிஎல் தொடரில் பணிபுரிகிறேன் என்றால் மாதந்தோறும் 5000 மக்களுக்கு நான் உணவு அளிக்கிறேன், இதனால் எனக்கு மாதம் 25 லட்சம் செலவாகிறது இது ஒரு வருடத்திற்கு 2.75 கோடியாகும், மேலும் நான் 25 லட்சம் செலவில் ஒரு நூலகத்தை கட்டி வருகிறேன், இதற்கு செலவாகும் பணத்தை எல்லாம் என்னுடைய சொந்த பணத்தில் இருந்து தான் செலவு செய்கிறேன், இது என்னுடைய எம்பி பண்டிலிருந்து (fund) செலவு பண்ணியது கிடையாது, இதற்கெல்லாம் அந்த பதவியை பயன்படுத்தக் கூடாது அதேபோன்று என்னுடைய வீட்டில் பணத்தை தரும் மரம் எதுவும் கிடையாது, அதிலிருந்து என்னால் பணத்தை எடுக்க முடியாது, நான் வேலை செய்வதற்கான முதல் முக்கிய காரணம் மாதம் தோறும் 5000 மக்களுக்கு உணவு அளிப்பதற்காக மற்றும் நூலகத்தை கட்டுவதற்காகவும் தான், அதனால்தான் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராகவும் மற்றும் பணிபுரியவும் செய்கிறேன் இதற்காக நான் வெட்கப்படவில்லை, எனக்கென்று ஒரு கனவு உள்ளது என்றும் கௌதம் காம்பீர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a comment

Your email address will not be published.