அந்த ஒரு மேட்ச் தவிர வேற என்ன பண்ணிட்டாரு… எதை வச்சு டி20 உலகக்கோப்பைல வாய்ப்பு கொடுத்தீங்க – தமிழக வீரரை வருத்தெடுத்த முன்னாள் வீரர்!

எதை வைத்து தினேஷ் கார்த்திக் டி20 உலக கோப்பையில் இடம் கொடுத்தீர்கள் என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் வீரர் மணிந்தர் சிங்.

தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் இடைவிடாமல் போராடி மீண்டும் மீண்டும் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்தார். 2019 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை இடம் பெற்று இருந்தார். அதில் சரிவர செயல்படவில்லை.

அதன் பிறகு ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்தார். பின்னர் ஐபிஎல் போட்டிகளில் பினிஷிங் ரோல் விளையாடி நன்றாக செயல்பட்டதால், அதைப் பார்த்த தேர்வு குழுவினர் டி20 போட்டிகளில் பினிஷிங் ரோலில் இறங்குவதற்கு வாய்ப்பு கொடுத்தனர்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நிதாஸ் டிராபி இறுதி போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக கடைசி 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்ததால் தொடர்ச்சியாக இவர் மீது தேர்வுகுழு நம்பிக்கை வைத்து இந்திய அணியிலும் அவ்வபோது வாய்ப்பு கொடுத்தது. ஆனால் எதிலும் சரியாக செயல்படவில்லை என்று கூற வேண்டும்.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இவருக்கு திருப்புமுனையாகும் அமைந்தது. ஆர்சிபி அணிக்காக ஃபினிஷிங் ரோலில் விளையாடிய இவர் 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்தார். அதிலும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் அதிகம்.

இந்த நம்பிக்கையிலும் டி20 உலக கோப்பையில் பினிஷிங் ரோலில் ஆடுவதற்கு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் அதையும் வீணடித்தார். முதல் நான்கு போட்டிகளில் களம் இறங்கி அனைத்திலும் சொதப்பினார்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் எந்த அடிப்படையில் இந்திய அணியில் எடுக்கப்பட்டார் என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் வீரர் மணிந்தர் சிங்.

அவர் பேசியதாவது: “எதன் அடிப்படையில் தினேஷ் கார்த்திக் இத்தனை ஆண்டுகள் இந்திய அணியில் தக்கவைக்கப்பட்டார் என்று எனக்குப் புரியவில்லை. கடைசியாக நிதாஸ் டிராபி போட்டியில் ஆடினார். அதுவும் நான்கு வருடங்களுக்கு முன்பு அதன் பிறகு எந்த போட்டியில் இவர் சர்வதேச கிரிக்கெட்டில் செயல்பட்டு விட்டார் என்று டி20 உலக கோப்பை எடுத்தனர். மிகப்பெரிய தவறை இந்திய அணி நிகழ்த்தி இருக்கிறது என்று இப்போதுதான் புரிந்து இருக்கிறதா? என சாடினார்.

 

Mohamed:

This website uses cookies.