2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடப்பதற்கு முன்னர் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஜோடி இந்திய அணியின் நம்பிக்கை ஜோடியாக பார்க்கப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து பல போட்டிகளில் எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்கி இருக்கின்றனர். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இவர்கள் இருவரும் தங்களுடைய அதே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இவர்கள் இருவரும் அந்த தொடரில் சரியாக விளையாடாமல் சொதப்பினார்கள்.
அந்த உலக கோப்பை தொடர் முடிந்த பின்னர் அதற்கு அடுத்து பல போட்டிகளில் இவர்கள் இருவரும் சரிவர விளையாடாமல் தொடர்ந்து சொதப்பி கொண்டே வந்தார்கள். அதன் காரணமாக இவர்கள் இருவரும் தற்போது பிசிசிஐ காண்ட்ராக்ட் பட்டியலில் பின் தங்கி கிரேட் சி வரிசைக்கு சென்றுள்ளார்கள்.

குறிப்பாக சஹால் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முடிந்த பின்னர் தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் சரியாக விளையாடாமல் சொதப்பி வருகிறார். அந்த தொடருக்கு பின்னர் இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 37.12 மற்றும் எக்கானமி 6.45க்கு சென்றுள்ளது. சற்று மோசமாக விளையாடி வந்த காரணத்தினால் இந்த ஆண்டு துவக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அவர் விளையாடவில்லை.
எல்லா போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க முடியாது
இந்நிலையில் தற்போது சஹால் பத்திரிகையாளர்களுக்கு ஒரு சில செய்திகளை கூறியிருக்கிறார். அதில் அவர் எல்லா போட்டிகளிலும் சிறப்பான தொடர்ந்து பங்களிக்க முடியாது என்றும், கிரிக்கெட் கேரியரில் ஏற்றத்தாழ்வு இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு நான் சரியாக விளையாடவில்லை ஆனால் அதை இந்த ஆண்டு மீண்டும் செய்ய விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார்.
இலங்கைக்கு எதிரான தொடரில் எனது புதிய பௌலிங் முறையை பார்ப்பீர்கள்
மேலும் பேசிய அவர் இந்திய டீம் மேனேஜ்மென்ட் மற்றும் இந்திய நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறது. அதன் காரணமாகவே இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் என்னை தேர்ந்தெடுத்து உள்ளது. மேலும் பவுலிங் பயிற்சியாளர் என் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். அவருடன் இணைந்து நான் எனது ஆட்டத்தை மேம்படுத்தி வருகிறேன் என்று சஹால் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர் 20 ஓவர் போட்டியில் விளையாடுவதை விட 50 ஓவர் போட்டியில் விளையாடுவது அவ்வளவு சுலபமாக இருக்காது. இருப்பினும் என்னுடைய புதிய பவுலிங் முறையை நீங்கள் அனைவரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பார்ப்பீர்கள் என்றும் கூறியிருக்கிறார். மேலும் பேசிய அவர் இலங்கைக்கு எதிரான தொடரில் சிறப்பாக பங்களித்து முடித்த பின்னர், ஐபிஎல் தொடர் மற்றும் உலக கோப்பை டி20 தொடரில் சிறப்பாக பங்களிக்க வேண்டும் என்பதே என்னுடைய முழு நோக்கம் என்றும், அதை நான் நிச்சயமாக செய்வேன் என்று சஹால் இறுதியாக எனக் கூறி முடித்தார்.