தொடரின் பாதியிலேயே கிளம்பும் விராட் கோலியை சாந்தமாக விளாசிய கபில் தேவ்!
ஆஸ்திரேலிய தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த உடன் இந்தியாவிற்கு திரும்ப விராட் கோலியின் முடிவை எதிர்த்து பேசியிருக்கிறார் முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மிக நீண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான மூன்றாவது மூன்று அணிகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் ஆஸ்திரேலியா சென்று அடைந்து தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர் . 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வைரஸ் இல்லாத வீரர்கள் அனைவரும் சிட்னி நகரில் அனுமதிக்கப்படுவார்கள்

இதுகுறித்து அவர் கூறுகையில்…
விராட் கோலி எடுத்த முடிவு எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இது சற்று வித்தியாசமான முடிவாகும் எங்களது அணியில் இருந்த சுனில் கவாஸ்கர் அவரது மகனை பல மாதங்கள் பார்க்காமல் விளையாடியிருக்கிறார். ஒவ்வொரு வீரரின் பார்வை யோசனை அணுகுமுறை எல்லாம் மாறுபட்டிருக்கும். நான் விராட் கோலிஅவரது தந்தை இறந்தபோது அடுத்த நாள் கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறார்.

ஆனால் தனது குழந்தைக்காக தற்போது ஓய்வு கேட்டிருக்கிறார். இது மிகச் சிறப்பானது அதற்கான வாய்ப்பினை நாம் வழங்க வேண்டும். நீங்கள் தற்போது ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து இந்தியாவிற்கு வந்து விட்டு மூன்று நாட்களில் மீண்டும் செல்லமுடியும். தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் இதனை செய்ய வழிவகை இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அவரது குடும்பத்தை பார்ப்பதற்காக திரும்பி வருகிறார் அவரது ஆர்வம் எனக்கு புரிகிறது என்று தெரிவித்திருக்கிறார் கபில் தேவ்