இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவரை மட்டுமே நம்பி களம்இறங்காதீர்கள் என இங்கிலாந்து வீரர்களை எச்சரிக்கிறார் துணை பயிற்சியாளர் பால் காலிங்வுட்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் தொடராக நடைபெறுகிறது ஆஷஸ் தொடர். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய இரு அணிகளும் மோதும் இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் வெற்றியை பெற்றது இல்லை என்ற சோகமான வரலாறு நிலவிவந்தது.

இந்நிலையில் இரு இன்னிங்சிலும் சதமடித்து ஆஸ்திரேலிய அணியை மீட்டெடுத்த ஸ்டீவ் ஸ்மித் இந்த சோதனையை சாதனையாக்கிய மாற்றி காட்டினார். இறுதியாக 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவிய சோகத்துடன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணி தயாராகி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக வெளியேறினார். முதல் டெஸ்டில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோப்ரா ஆர்ச்சர் முழு உடல்தகுதி பெறாததால் வெளியில் அமர்த்தப்பட்டிருந்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு ஆர்ச்சர் முழு உடல்தகுதி பெற்று விட்டார். அதேநேரம் ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்டில் அறிமுகமாக இருக்கிறார் ஆர்ச்சர்.

ஆஸ்திரேலிய அணியை தனது பந்துவீச்சால் துவம்சம் செய்து நிச்சயம் வெற்றியை பெற்றுத் தருவார் ஆர்ச்சர் என ரசிகர்கள் அனைவரும் நம்புகின்றனர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளர் பால் காலிங்வுட் கூறுகையில், “ஜோ ரூட் தலைமையிலான அணி நிச்சயம் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெல்லும்” என்றார்.

அதேநேரம், “ஜோப்ரா ஆர்ச்சர் ஒருவரை மட்டுமே நம்பி இங்கிலாந்து அணி களம் இறங்கவில்லை. அப்படி களமிறக்கவும் இயலாது. எங்களிடம் ஏற்கனவே வேகப்பந்து வீச்சில் அசத்தும் வீரர்கள் இருக்கின்றனர். அவர்களில் ஒருவராகத்தான் ஆர்ச்சரை பார்க்கவேண்டும். தவிர, அவர் புதிதாக எங்கிருந்தும் குதிக்கவில்லை. வீரர்களும் அவரை மட்டுமே நம்பி இருக்க வேண்டாம். அனைவரும் சமமாக பங்களிக்கவேண்டும்” என திட்டவட்டமாக பதிலளித்தார். • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...