டிராவிட்ட தூக்கிட்டு இவர பயிற்சியாளராக்குங்க.... எல்லா பிரச்சனையும் சரியாகிடும்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 1
டிராவிட்ட தூக்கிட்டு இவர பயிற்சியாளராக்குங்க…. எல்லா பிரச்சனையும் சரியாகிடும்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

விண்டீஸ் அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கெத்தாக கைப்பற்றிய இந்திய அணியால், டி.20 தொடரில் விண்டீஸ் அணியை இலகுவாக சமாளிக்க முடியவில்லை.

விண்டீஸ் அணியுடனான முதல் இரண்டு டி.20 போட்டியில் இந்திய அணி தோல்வியையே சந்தித்தது. முதல் இரண்டு போட்டியிலும் மிரட்டல் வெற்றி பெற்ற விண்டீஸ்  அணி 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டி.20 போட்டி 8ம் தேதி நடைபெற உள்ளது.

டிராவிட்ட தூக்கிட்டு இவர பயிற்சியாளராக்குங்க.... எல்லா பிரச்சனையும் சரியாகிடும்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 2

விண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியின் தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக இருப்பதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான டேனிஷ் கனேரியா, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

டிராவிட்ட தூக்கிட்டு இவர பயிற்சியாளராக்குங்க.... எல்லா பிரச்சனையும் சரியாகிடும்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு !! 3

இது குறித்து டேனிஷ் கனேரியா பேசுகையில், “இந்திய அணி ஏன் போதிய இன்டென்ட்டை காட்டவில்லை? ஆஷிஷ் நெஹ்ரா பயிற்சியில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுள்ளார். இந்தியா அதிக இன்டெண்ட்டை காட்ட வேண்டும். அதில் ஒரு பயிற்சியாளரின் பங்கு மிக மிக முக்கியம்.ராகுல் டிராவிட் உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் டி20 போட்டிகளில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருப்பதற்கு தகுதியற்றவர். அவர் மிகவும் மெதுவாக இருக்கிறார். மறுபுறம் ஆஷிஷ் நெக்ராவை பார்க்கும் பொழுது, அவர் எப்பொழுதும் பரபரப்பாக இருந்து களத்துக்கு செய்திகளை அனுப்பி கொண்டே இருக்கிறார். இவருக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *