2. கவாஸ்கரிடம் தனக்கு தானே சூனியம் வைத்த ஃபரூக் எஞ்சிணீயர் டக்
1971 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தனது அறிமுக போட்டியில் ஆடினார் கவாஸ்கர். அப்போது இந்திய அணியின் ஒப்பனராக இருந்தவர் சீனியர் வீரர் ஃபரூக் எஞ்சிணீயர். அந்த ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிய உலக லெவன் அணியில் இருவரும் ஓப்பனராக களம் இறங்கினர். போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்தது. இருவரும் ஓப்பனராக மைதானத்திற்குள் செல்லும் முன்பு இளம் வீரர் கவாஸ்கருக்கு சில அறிவுரை கூறினார். ‘ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் மிரண்டு போய், டக் ஆவுட் ஆகிவிடாதே கவாஸ்கர், மெர்போர்ன் மிகப்பெரிய மைதானம். பெவிலியன் செல்ல அதிக தூரம் நடக்க வேண்டும்’ என கிண்டலடித்திருக்கிறார்’.
ஆனால், நடந்தது என்னவென்றால், தனக்கு தானே சூனியம் வைத்து ஃபரூக் எஞ்சிணீயர் டக் அவுட் ஆகி ‘லாங்-வாக்’ போட்டு பெவிலியன் திரும்பினார். அந்த நாள் ஆட்டம் முடிந்ததும், சீனியர் என்று கூட பார்க்காமல் டீம் மேட்சை வைத்து பங்கமாக் கலாய்த்து தள்ளியிருக்கிறார் கவாஸ்கர்.