3. சேவாக்கின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்ட ஜான் ரைட்
சேவாக் தனது அறிமுக காலத்தில் அதிரடியாக ஆடி அணிக்கு ஒரு நல்ல துவக்கம் கொடுத்து வந்தார். 2002ல் 23 வயதேயான சேவாக் இங்கிலாந்தில் நாட்-வெஸ்ட் ட்ராபியில் அற்புதமாக ஆடிகொண்டிருந்தார். ஆனால், வழக்கம் போல் அவரது சில அசட்டையான ஷாட்டுகளால் தனது விக்கெட்டை இழந்து கொண்டிருந்தார்.

இதனால் கடுப்பாகிப் போன பயிற்சியாளர் ஜான் ரைட், ‘இனிமேல் இந்த பையன் இப்படி தேவையில்லாத சோம்பேறித்தனமான ஷாட் அடித்து அவுட், ஆனால் கண்டிப்பாக அவனை மோசமாக நடத்தப் போகிறேன்’ , என ராகுல் ட்ராவிட்டிடம் கூறியிருக்கிறார்.
அதே போல், சேவாக் அடுத்த போட்டியிலும் அப்பையே மொக்கையான ஷாட்டால் அவுட் ஆக, ‘கோபபடைந்த ஜான் ரைட், சேவாக்கின் சட்டை காலரை பிடித்து, கோபமாக கேள்விகள் கேட்டு அறிவுறை கூறியிருக்கிறார்’, ஆனால், நல்ல ஒரு ஸ்போர்ட்ஸ் மேனாக சேவாக் இந்த விசயத்தை பெரிதுபடுத்தவில்லை. ராகுல் ட்ராவிட்டும் ஜான் ரைட் சொன்னதை செய்துவிடார் என பாராட்டிவிட்டு போய்விட்டார்.