4. இந்திய ட்ரெசிங் ரூமிற்கு வந்த நிழல் உலக தாதா, தாவுத் இப்ராகிம், நெத்தியடி கொடுத்து வெளியே அனுப்பிய கேப்டன் கபில் தேவ்
கடத்தில், தீவிரவாத செயல்கள்லுக்கு துணை போதல் என எண்ணற்ற வழக்குகளில் 1980ல் இருந்து இந்தியாவினால் தேடப்பட்டு வருபவன் தாவ்வுத் இப்ராகிம். தர்போது துபாயில் இருப்பதாக கூறப்படுகிறது. உலகின் டாப்-10 தேடப்படும் குற்றவாளிகளில் 3ஆவது இடத்தில் இருக்கும் தாவுத் இப்ராகிம் துபாயின் ஷார்ஜாவில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடந்த போது, இந்திய அணியின் ட்ரெசிங் ரூமிற்கு வந்துள்ளான். மேலும், பாகிஸ்தானை வீழ்த்தினால் அனைவருக்கும் ஒரு கார் பரிசளிப்பதாக பேரம் பேசியுள்ளான்.
அப்போது வந்த கேப்டன் கபில் தேவ் ‘வெளியே போய்விடு’ என பலத்த குரலில் கூறி அவனை வெளியேற்றியுள்ளார். இந்த சம்பவத்தை போட்டி முடிந்த அடுத்த நாளில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார் திலிப் வெங்கசர்கார்.