5.உலகககோப்பையை கையில் வாங்கிய சச்சினின் மிகப்பெரிய ரசிகர் சுதிர் குமார்
சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய ரசிகர் சுதிர் குமாரை யாருக்குத் தான் தெரியாது. சச்சின் விளையாடும் போட்டிகளில் எல்லாம் அவரும் அந்த மைதானத்திற்கு சென்று விடுவார். இப்படியான ஒரு ரசிகருக்கு மரியாதை செலுத்த யாருக்கு தான் மனது வராது. அப்படி தான், 2011ல் இந்திய அணி உலககோப்பை வென்றபோது, அவரை ட்ரெசிங் ரூமிற்கு அழைத்து அவருக்கும் அந்த உலகக்கோப்பையை கொண்டாட வழி செய்து கொடுத்தார் சச்சின் டெண்டுல்கர். அந்த உலகக்கோப்பையை சுதிர் குமாரின் கையில் கொடுத்து மகிழ்வுற செய்தார் சச்சின்.