6. கேப்டனையே ஏமாற்றி விளையாடிய யுவராஜ் சிங்
யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சௌரவ் கங்குலி தலைமையில் விளையாடிய போது இது நடந்தது. இருவரும் சேர்ந்து கேப்டன் கங்குலியை ஏப்ரல் ஃபூல் ஆக்க நினைத்து இருவரும் சேர்ந்து ஒரு போலியான பத்திரைக்கை செய்தியை தயாரித்தனர். அந்த செய்தியில், யுவ்ராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரும் சரியான பண்பு இல்லாதவர்கள், ட்ரெசிங் ரூமில் இருவரும் எப்போதும் தேவையில்லாத வேலையை செய்து அனைவரையும் துன்புருத்துவார்கள் என கங்குலி பேட்டி கொடுத்ததாக பத்திரைக்கை செய்தி தயாரித்தனர்.

பின்னர் ராகுல் ட்ராவிட், கங்குலி இருவரும் இருக்கும் அறைக்கு ஏப்ரல் 1 அன்று சென்று யுவ்ராஜ் சிங் அதனை வாசித்து காடி கங்குலியிடம் ஏன் இப்படி செய்தீர்கள் எனக் கேட்க, உடனே கங்குலியும் அதனை நம்பி நான் அப்படி சொல்லவில்லை என இருவரையும் சமாதானப்படுத்த அரை மணி நேரம் பேசியுள்ளார். உடன் இருந்து ட்ராவிட் அரை மணி நேரம் சிரிப்பை அடக்கி கொண்டிருந்து, பின்னர் அடக்க முடியாமல் சிரித்து விட கங்குலி அதனை கண்டுபிடித்து மூன்று பேரையும் பின்னி பெடலெடுத்து விட்டார்.