7. யுவராஜ் ஓப்பனிங்கா? என்ன விளையாட்றிங்காலா?
2001ல் இங்கிலாந்தில் நடைபெற்ற நாட்-வெஸ்ட் ட்ராபியில் இந்த சுவாரஸ்யமான விசயம் நடைபெற்றது. போட்டி துவங்கும் ஒருநாளிற்கு முன்னர் யுவராஜ் சிங்கிடம் சென்ற சௌரவ் கங்குலி நாளை போட்டியில் ஓப்பனிங் இறங்கு எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். அப்போது 20 வயதே ஆன யுவராஜ் சிங் எப்படி ஓப்பனிங் செய்வது, அதுவும் இங்கிலாந்து ஆடுகளத்தில் ஸ்விங்க் அதிகமாக இருக்குமே என இரவெல்லாம் யோசித்து இருக்கிறார்.

அடுத்த நாள் போட்டியின் இந்திய அணியின் பேட்டிங்கின் போது, துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க யுவராஜ் சிங் தயாராக ட்ராவிட், சேவாக், லட்சுமனன் என எல்லாரும் யுவராஜை பார்த்து சிரிக்க, அருகில் வந்த கங்குலி, ‘சும்மா விளையாடினேன்’ எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதனை இப்போது சொல்லி சிரிப்பார் யுவராஜ் சிங்.