8. சச்சினின் இரட்டை சத ஏமாற்றம், ட்ராவிட் செய்த வினை
2004ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 196 ரன்னில் ஆடிக் கொண்டிருக்க, அப்போது அணியின் தற்காலிக கேப்டனாக இருந்த ராகுல் ட்ராவிட் ஆட்டத்தை டிக்ளேர் செய்துவிட்டார். டிக்ளேர் செய்தவுடன் சச்சின் டெண்டுகர் ஷாக் ஆகி ட்ராவிட்டை பார்த்தார். இன்னும் 5 நிமிடம் விட்டிருந்தால் சச்சின் இரட்டை சதம் அடித்திருப்பார். ஏன் இப்படி செய்தார் ட்ராவிட் என அணி வீரர்கள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர். எப்படியும் ட்ரெசிங் ரூமிற்கு வந்து க்லவுஸ், பேட் என அனைத்தையும் வீசி எறிவார் என நினைத்தார்கள்.

ஆனால், அதற்கு மாறாக சச்சின் செய்தது அனைவரையும் ஆச்சரியப் படுத்தியது. ட்ராவிட்டை பார்த்து , ‘அவரை தனியாக விடுங்கள்’ எனக் கத்திவிட்டு போய்விட்டார் சச்சின். பின்னர் பயிற்சியாளர் ஜான் ரைட் மற்றும் கேப்டன் சௌரவ் கங்குலி ஆகியோர் சச்சினிடம் இது குறித்து மன்னிப்பு கேட்டனர்.