2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 170 ரன்கள் எடுத்தது இந்திய அணி.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி திருவனந்தபுரத்திலுள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதல் போட்டியில் அரைசதம் கண்ட கேஎல் ராகுல் இம்முறை 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனை அடுத்து மூன்றாவது இடத்தில் களமிறங்கும் விராட் கோலி திடீரென யாரும் எதிர்பாராத வகையில் சிவம் துபேவை களமிறக்கினார்.
துவக்கத்தில் சற்று தடுமாறிய துபே, சிறிது நேரத்தில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென அரைசதம் கண்டார். 26 பந்துகளில் அரை சதம் அடித்த இவர் 30 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.இது டி20 கிரிக்கெட் போட்டிகளில் இவரது முதல் அரை சதம் ஆகும்.

ரோகித் சர்மா 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலியும் 17 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, நல்ல நிலையில் இருந்த இந்திய அணி சற்று தடுமாற்றம் கண்டது.
மிடில் ஆர்டரில் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 10 ரன்களுக்கும், ரவீந்திர ஜடேஜா 9 ரன்களுக்கும், வாஷிங்டன் சுந்தர் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

Photo by Vipin Pawar / Sportzpics for BCCI
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 22 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.
விண்டீஸ் அன்னைக்கு அதிகபட்சமாக வால்ஸ் மற்றும் வில்லியம்ஸ் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.