தென்னாப்பிரிக்காவில் நடக்கும் குளறுபடி, சிஎஸ்கே வீரர் ஓய்வு அறிவிப்பு! சிஎஸ்கே பவுலிங் வீக் ஆகிறதா? 1

தென்னாபிரிக்கா மற்றும் சிஎஸ்கே அணியில் விளையாடி வரும் டுவைன் பிரெட்டோரியஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் 2016ம் ஆண்டு அறிமுகமாகி தென்னாபிரிக்கா அணிக்காக 30 டி20 போட்டிகள், 27 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆல்ரவுண்டர் டுவைன் பிரெட்டோரியஸ், 77 விக்கெட்டுகள் மற்றும் 536 ரன்களை அடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் குளறுபடி, சிஎஸ்கே வீரர் ஓய்வு அறிவிப்பு! சிஎஸ்கே பவுலிங் வீக் ஆகிறதா? 2

கடந்த 2021ம் ஆண்டு டி20 உலககோப்பையில் விளையாடினார். 2022ம் ஆண்டு டி20 உலககோப்பைக்கு பிரெட்டோரியஸ் எடுக்கப்படவில்லை. கடைசியாக 2022ல் அக்டோபர் மாதம் டி20 போட்டியிலும், ஜூலை மாதம் ஒருநாள் போட்டியிலும் விளையாடினார். அதன்பின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தென்னாபிரிக்கா அணிக்காக 2019ம் ஆண்டு 50-ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை என இரண்டு உலககோப்பைகளில் விளையாடியுள்ள பிரெட்டோரியஸ், டி20 போட்டியில் தென்னாபிரிக்காவின் சிறந்த பந்துவீச்சான 17 ரன்களுக்கு 5 விக்கெட் என்பதை தன்வசம் வசம் வைத்துள்ளார். இதை பாகிஸ்தான் அணிக்கு எதிராக நிகழ்த்திக்காட்டியுள்ளார்.

 

இந்நிலையில், ஜனவரி 9ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 33 வயதாகும் பிரெட்டோரியஸ், இனி லீக் போட்டிகளில் முழு கவனம் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் குளறுபடி, சிஎஸ்கே வீரர் ஓய்வு அறிவிப்பு! சிஎஸ்கே பவுலிங் வீக் ஆகிறதா? 3

தனது ஓய்வு அறிக்கையில், “தென் ஆப்பிரிக்காவுடன் ஒப்பந்தத்தில் இல்லாமல் தொடர்ந்து லீக் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த உள்ளேன் அது கிரிக்கெட் வாழ்க்கை மற்றும் குடும்பம் இரண்டையும் கவனித்துக் கொள்வதற்கு இது ஏதுவாக இருக்கும்.

சர்வதேசப் போட்டிகளில் என்னை புறக்கணித்த போது மீண்டும் என்னை அணியில் எடுத்த டூப்லசிஸ் சுக்கு இந்த தருணத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன் அதன்பிறகு தொடர்ந்து என்னை அவர் அணியில் வைத்துக் கொண்டார் என்னிடம் இருந்து முழு திறமையை வெளிக்கொண்டுவதற்கு உதவினார் மேலும் அந்த சமயத்தில் எனக்கு பக்கபலமாக இருந்த இன்னும் சில தென்னாப்பிரிக்கா வீரர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை கூறிக் கொள்கிறேன்.

தென் ஆப்பிரிக்கா அணைக்காக அந்த பச்சை நிற உடையை அணிந்து விளையாட வேண்டும் என்பது என் சிறு வயதில் இருந்தே கனவாக இருந்தது ஆனால் அதை எப்படி செய்ய வேண்டும் என்று அப்போது எனக்கு தெரியவில்லை தொடர்ச்சியாக என் உழைப்பை கொடுத்து வந்தேன் அதன் உதவியாக சில ஆண்டுகள் தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன் ஒவ்வொரு முறை இந்த பச்சை நிற உடையை அணிந்து களத்தில் இறங்கும்பொழுதும் எனது முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன் இறுதிவரை போராடி உள்ளேன் சில நேரங்களில் தவறு நடந்து இருக்கிறது அது அந்த போட்டியில் சூழலை பொறுத்தே முழுக்க முழுக்க அமைந்திருக்கிறது அப்போதும் நான் என் முழு திறமையை வெளிப்படுத்தியுள்ளேன் என்றார்.

தென்னாப்பிரிக்காவில் நடக்கும் குளறுபடி, சிஎஸ்கே வீரர் ஓய்வு அறிவிப்பு! சிஎஸ்கே பவுலிங் வீக் ஆகிறதா? 4

ஐபிஎல்-இல் சிஎஸ்கே அணிக்காகவும், தென்னாபிரிக்கா டி20 லீகில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காகவும், ‘தி 100’ தொடரில் வேல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

பிரெட்டோரியஸ் ஓய்வு முடிவை அறிவித்தவுடன் இனி ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட மாட்டாரா? என்கிற சந்தேகங்கள் நிலவியது. ஏனெனில் சிஎஸ்கே அணிக்கு டெத் ஓவர் வீசுவதற்கு பிரெட்டோரியஸ் தவிர வேறு எவரும் இல்லை. டிவைன் பிராவோ ஓய்வு பெற்று விட்டார். ஆகையால் இவர் ஒருவர் மட்டுமே இருப்பதால், சிக்கல் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சத்தால் அப்படி நிலவியது. அதன் பிறகு தனது ஓய்வு அறிக்கையில், லீக் போட்டிகளில் விளையாடுவேன் என பிரெட்டோரியஸ் அறிவித்ததால் அந்த சிக்கல் இல்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *