முடிஞ்சா தொட்டு பாரு.. மிகப்பெரும் உலக சாதனை படைத்துள்ளார் டூவைன் பிராவோ !! 1

முடிஞ்சா தொட்டு பாரு.. மிகப்பெரும் உலக சாதனை படைத்துள்ளார் டூவைன் பிராவோ

விண்டீஸ் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்த டூவைன் பிராவோ, டி.20 கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

விண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்ந்த ஆல் ரவுண்டர் டூவைன் பிராவோ, தற்பொழுது ஐ.பி.எல் போன்று உள்ளூர் தொடர்களில் மாஸ் காட்டி வருகிறார்.

ஐ.பி.எல் தொடரை போல், வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் என்னும் அணிக்காக விளையாடி வருகிறார்.

முடிஞ்சா தொட்டு பாரு.. மிகப்பெரும் உலக சாதனை படைத்துள்ளார் டூவைன் பிராவோ !! 2

இந்த தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செயிண்ட் லூக்கா சோகஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் எதிரணி வீரர் லூக்காவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் டி.20 கிரிக்கெட் அரங்கில் தனது 500வது விக்கெட்டை பதிவு செய்த டூவைன் பிராவோ, இதன் மூலம் டி.20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கடந்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக டி.20 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை கடந்த முதல் வீரர் என்ற வரலாறும் பிராவோவிடமே உள்ளது.

முடிஞ்சா தொட்டு பாரு.. மிகப்பெரும் உலக சாதனை படைத்துள்ளார் டூவைன் பிராவோ !! 3

அதே போல் கரீபியன் லீக்கில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் பிராவோவிடமே உள்ளது.

டி.20 போட்டியில் பிராவோவிற்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவர் இலங்கை அணியின் லசித் மலிங்கா ஆகும். மலிங்கா டி20 கிரிக்கெட்டில் இதுவரை 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *