காயம் காரணமாக விலகும் சென்னை அணியின் முக்கிய வீரர்; கவலையில் ரசிகர்கள்
காயம் காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் நடைபெறும் போட்டிகளில் இருந்து சென்னை அணியின் ஆல் ரவுண்டர் டூவைன் பிராவோ விலகியுள்ளார்.
ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் களைகட்டி வருகிறது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தான் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
ஆனால், வான்கடே மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சி.எஸ்.கே அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டது.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரரான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ இடம்பிடித்து விளையாடி வருகிறார். சென்னை அணியில் ‘டெத் ஓவர்கள்’ வீசுவதில் வல்வராக திகழ்ந்து வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது, இவருக்கு ஹாம்ஸ்டிரிங் (Hamstring) காயம் ஏற்பட்டது.
இதனால் நாளைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவருக்கு முதல் நிலை ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு வாரங்கள் அவர் விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

டூவைன் பிராவோ விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளரான நியூசிலாந்து அணியை சேர்ந்த ஸ்காட் குஜ்லியானுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை நடைபெறும் போட்டியில் அஸிவின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியையும், 9-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸையும், 11-ந்தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும், 14-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடசர்ஸ் அணியையும், 17-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தையும் எதிர்கொள்கிறது.