ஒரு ஓவருக்கு 5 பந்துகள் தான்… இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புது முடிவு
வரும் 2020ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் ஒரு ஓவருக்கு 5 பந்துகள் தான் என்ற புதிய முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.

தொலைக்காட்சி ஒலிபரப்பாளர்கள் டி20 போட்டிகளை மேலும் சுருக்கி சில மாற்றங்களை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள். 2020ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் டி20 போட்டிகளில் இந்த மாற்றம் ஏற்படும்.
2020ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்தில் நடக்கும் டி20 போட்டிகளில் ஓவருக்கு 5 பந்துகள் மட்டுமே வீசப்படும். அதுமட்டும் இல்லாமல், தற்போது ஒரு ஓவர் முடிந்த பிறகு பந்துவீச்சாளர்கள் மற்றொரு முனையில் இருந்து வீசுவார்கள். ஆனால் இங்கிலாந்து அறிமுக படுத்திய புது விதியில் ஒரு இன்னிங்ஸ் முடிந்த பிறகு தான் பந்து வீச்சாளர்கள் மற்றொரு முனையில் இருந்து பந்துவீசுவார்கள்.

டி20 போட்டிகளை வேகமாக நடத்தி முடிக்க இந்த சட்டத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கொண்டுவந்துள்ளது, இதனால் டி20 போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கும். இதனால் தொலைக்காட்சி ஒலிபரப்பாளர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு அதிக பிரஷர் தருவதாக தெரிகிறது. இதை இன்னும் இரண்டரை வருடத்திற்குள் அமல்படுத்துமாறு BCC போன்ற பெரிய ஊடக நிறுவங்கங்கள் கேட்டுக்கொண்டுள்ளது.