லக் இல்லாம ஒன்னுமே பண்ண முடியாது... அப்துல் சமாத் பினிஷிங் காரணமல்ல... வெற்றிக்கு காரணம் இதுதான் - ஆட்டநாயகன் கிளென் பிலிப்ஸ் பேட்டி! 1

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றதற்கு காரணம் இதுதான் என்று ஆட்டநாயகன் விருது பெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் கிளென் பிலிப்ஸ் பேசியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சொந்த மைதானமான சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

சஞ்சு சாம்சன் 38 பந்துகளுக்கு 66 ரன்கள், ஜோஸ் பட்லர் 59 பந்துகளுக்கு 35 ரன்கள் விளாசினர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது.

லக் இல்லாம ஒன்னுமே பண்ண முடியாது... அப்துல் சமாத் பினிஷிங் காரணமல்ல... வெற்றிக்கு காரணம் இதுதான் - ஆட்டநாயகன் கிளென் பிலிப்ஸ் பேட்டி! 2

215 ரன்கள் இலக்கை எட்டுவதற்கு களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர் அபிஷேக் சர்மா 54 ரன்கள், அன்மோல்பிரீத் சிங் 33 ரன்கள் அடித்து நல்ல துவக்கம் கொடுத்தனர். அடுத்து உள்ளே வந்த க்ளாசன் வெறும் 12 பந்துகள் மட்டுமே பிடித்து 26 ரன்கள் அடித்தார்.

கடைசி மூன்று ஓவர்களில் 44 ரன்கள் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. 18ஆவது ஓவரை சகல் வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து அழுத்தம் ஏற்படுத்தினார். போட்டியின் 19ஆவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை ஹைதராபாத் அணியின் பக்கம் திருப்பி மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தார். அதற்கு அடுத்த பந்தே ஆட்டமிழந்து பேர் அதிர்ச்சியையும் கொடுத்தார்.

லக் இல்லாம ஒன்னுமே பண்ண முடியாது... அப்துல் சமாத் பினிஷிங் காரணமல்ல... வெற்றிக்கு காரணம் இதுதான் - ஆட்டநாயகன் கிளென் பிலிப்ஸ் பேட்டி! 3
Credit – jio cinema

கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்துல் சமாத் சிக்ஸர் மற்றும் இரண்டு ரன்கள் ஓடி எடுக்க, கடைசி பந்தில் ஐந்து ரன்கள் அடிக்க வேண்டியது இருந்தது. தவறான நேரத்தில் நோ-பால் வீசினார் சந்தீப் சர்மா. இந்த ஃபிரீ ஹிட்டை பயன்படுத்தி ஒரு சிக்சர் அடித்து முடியாத போட்டியை ஹைதராபாத் அணிக்கு அப்துல் சமாத் முடித்தும் கொடுத்தார்.

ஏழு பந்துகளில் 25 ரன்கள் அடித்து ஆட்டத்தை ஹைதராபாத் அணியின் பக்கம் திருப்பியதற்காக கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

லக் இல்லாம ஒன்னுமே பண்ண முடியாது... அப்துல் சமாத் பினிஷிங் காரணமல்ல... வெற்றிக்கு காரணம் இதுதான் - ஆட்டநாயகன் கிளென் பிலிப்ஸ் பேட்டி! 4

“ஆட்டம் இந்த பக்கமா? அந்த பக்கமா? என்று பதட்டத்தில் இருந்தபோது, எங்கள் பக்கம் முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அணியினர் ஒவ்வொருவரிடமும் அணி நிர்வாகம் இதைத்தான் எதிர்பார்க்கிறது. அவர்கள் எதிர்பார்ப்பை இன்று பூர்த்தி செய்ததும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் நான் விளையாடி கொடுத்ததற்கு பலன் கிடைத்தத்தால் சந்தோசமாக உணர்கிறேன்.

நான் அவுட்டான பந்து அடிக்கக்கூடிய இடத்தில் தான் வீசப்பட்டது. அதை பவுண்டரிக்கு வெளியே அடித்திருக்க வேண்டும். தவறவிட்டதால் சற்று வருத்தமாக இருந்தது. இன்று உள்ளே சென்று நான் விளையாடியது ஃபன்னாக இருந்தது. கடைசி ஓவரில் 17 ரன்கள் இருந்ததால் நிறைய ரன்களை மிச்சம் வைத்துவிட்டு அவுட் ஆகி விட்டேனோ என்று சற்று வருத்தப்பட்டேன்.

லக் இல்லாம ஒன்னுமே பண்ண முடியாது... அப்துல் சமாத் பினிஷிங் காரணமல்ல... வெற்றிக்கு காரணம் இதுதான் - ஆட்டநாயகன் கிளென் பிலிப்ஸ் பேட்டி! 5

அப்துல் சமாத் நன்றாக பினிஷ் செய்திருக்கலாம், அதேநேரம் லக் எங்கள் பக்கம் இருந்தது. லக் இல்லை என்றால் இன்னும் கடினமாக முடிந்திருக்கும்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *