கத்துக்குட்டின்னு நெனச்சியாடா... தப்புகணக்கு போட்டு ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்த இங்கிலாந்து அணி! - உலககோப்பையில் வரலாறுகாணா வெற்றி! 1

285 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணியை 215 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து, 69 ரன்கள் வித்தியசாத்தில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

டெல்லியில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய உலககோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் இறங்கியது. ஓப்பனிங் வீரர்கள் குர்பாஸ் மற்றும் ஜத்ரான் இருவரும் களமிறங்கினர். இதில் குர்பாஸ் முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடி விரைவாக அரைசதம் அடித்தார் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தது, துரதிஷ்டவசமாக குர்பாஸ் 80(57) ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

கத்துக்குட்டின்னு நெனச்சியாடா... தப்புகணக்கு போட்டு ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்த இங்கிலாந்து அணி! - உலககோப்பையில் வரலாறுகாணா வெற்றி! 2

ஜத்ரான் 28 ரன்களுக்கு அவுட்டானார். விக்கெட் கீப்பர் ஐக்ரம் 58 ரன்கள், ரஷீத் கான் 23 ரன்கள், முஜீப் உர் ரஹ்மான் 28 ரன்கள் அடித்துக்கொடுக்க, 49.5 ஓவர்களில் 284 ரன்கள் அடித்து ஆப்கானிஸ்தான் அணி ஆல் அவுட் ஆனது.

இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பேரதிர்ச்சியாக துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ்(2) விக்கெட்டை தூக்கினார் ஃபரூக். பவர்-பிளே ஓவரில் தைரியமாக பௌலிங் செய்த சுழல் பந்துவீச்சாளர் முஜிப், தனது மாயாஜால சூழலில் ஜோ ரூட்(11) விக்கெட்டை போல்ட் செய்து எடுக்க ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.

கத்துக்குட்டின்னு நெனச்சியாடா... தப்புகணக்கு போட்டு ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்த இங்கிலாந்து அணி! - உலககோப்பையில் வரலாறுகாணா வெற்றி! 3

சிறந்த பார்மில் இருந்த டேவிட் மலான்(32), இந்த போட்டியிலும் 30 ரன்கள் கடந்து விளையாடி வந்தார். அப்போது முகமது நபி சிறப்பான பந்துவீச்சில் அவரது விக்கெட்டை தூக்கி இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

மறுபக்கம் ஹாரி புரூக் அரைசதம் கடந்து இங்கிலாந்து அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக விளையாடி வந்தபோது, மற்றொரு பக்கம் வரிசையாக விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தன. பட்லர் 9 ரன்கள் மற்றும் சாம் கர்ரன், லிவிங்ஸ்டன் இருவரும் தலா 10 ரன்கள் அடித்து அவுட் ஆகினர்.

கத்துக்குட்டின்னு நெனச்சியாடா... தப்புகணக்கு போட்டு ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்த இங்கிலாந்து அணி! - உலககோப்பையில் வரலாறுகாணா வெற்றி! 4

அடில் ரஷீத்(20), மார்க் உட்(18) மற்றும் டாப் லீ(10) ஆகியோர் கீழ் வரிசையில் சிறிது பங்களிப்பை கொடுத்தாலும் இங்கிலாந்து அணி இலக்கை எட்டுவதற்கு இது போதவில்லை. 40.3 ஓவர்களில் 215 ரன்கள் மட்டுமே அடித்திருந்த இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ரஷீத் கான், முஜீப் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். நபி 2 விக்கெட்டுகள், பரூக் மற்றும் நவீன் தலா 1 விக்கெட் எடுத்து வெற்றியை சாத்தியமாக்கினர். வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒட்டுமொத்தமாக பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும். 2015 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணியை முதல் முறையாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *