எங்களுக்கு இருக்குற ஒரே தலைவலி இந்த வீரர் தான் ; வெளிப்படையாக பேசிய லியாம் லிவிங்ஸ்டன் !! 1

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான், இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் நெருக்கடியாக இருப்பார் என்று இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆள்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 16ம் தேதி துவங்கிய இந்த தொடர் நவம்பர் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

எங்களுக்கு இருக்குற ஒரே தலைவலி இந்த வீரர் தான் ; வெளிப்படையாக பேசிய லியாம் லிவிங்ஸ்டன் !! 2

இதில் நாளை (22/11/2022) இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பை தொடருக்கான முதல் போட்டியை எதிர்கொள்ள உள்ளது. இரண்டு அணிகளுமே சம பலம் வாய்ந்த அணியாக திகழ்வதால் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்,இந்த போட்டியில் எந்த வீரர் சிறப்பாக செயல்படுவார்கள், யாரை ஆடும் லெவனில் இடம்பெற வேண்டும் என்பது போன்ற முக்கியமான கருத்துகளை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் விவாதித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் நாளை நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டன் தன்னுடைய எதிர்பார்ப்பை தெரிவித்தது மட்டுமில்லாமல், ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷீத் கான் இங்கிலாந்து அணிக்கு மிகவும் அச்சுறுத்தக் கூடிய ஒரு வீரர் என்றும் தெரிவித்துள்ளார்.எங்களுக்கு இருக்குற ஒரே தலைவலி இந்த வீரர் தான் ; வெளிப்படையாக பேசிய லியாம் லிவிங்ஸ்டன் !! 3

இதுகுறித்து லியாம் லிவிங்ஸ்டன் தெரிவித்ததாவது, “நாளை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான எங்களுடைய முதல் உலகக் கோப்பை போட்டியை விளையாடவுள்ளோம், இதனால் இரு அணிகளுமே எதிரணியில் இருக்கும் வீரர்களின் பலம் மற்றும் பலவீனத்தை நன்கு அறிந்து வைத்துள்ளோம், இதில் எந்த ஒரு ரகசியமும் கிடையாத. ஆப்கானிஸ்தான் அணி எப்படி விளையாடும் என்பது குறித்து தெளிவான திட்டம் எங்களிடம் உள்ளது, அவர்களுக்கு எங்களை பற்றியும் நன்றாகவே தெரியும், குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் ரஷித் கான் நிச்சயம் இங்கிலாந்து அனுப்பி மிகப்பெரிய நெருக்கடியாக இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது உலகின் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்களின் ஒருவர் மேலும் அவர் என்னுடைய சிறந்த நண்பர் என்று லியாம் லிவிங்ஸ்டன் தெரிவித்திருந்தார்.

 

நாளை முதல் சூப்பர் 12இன் போட்டிகள் நடைபெற இருப்பதால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் நாளை முதல் கிரிக்கெட் போட்டியை காண்பதற்கு ஆவலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *