ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து.. ட்விட்டரில் பாராட்டு மழை 1
(Photo Source: Getty Images)

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா இரு அணிகளும் மோதி வருகின்றன. இதில் 3வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து ஒருநாள் போட்டியில் அதிக ஸ்கோரை பதிவு செய்தது. 50 ஒவர்களில் 481/6 என்ற இமாலய இலக்கை எட்டியது.

ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து.. ட்விட்டரில் பாராட்டு மழை 2
(Photo Source: Getty Images)

முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் பார்ஸ்டாவ் மற்றும் ஜேசன் ராய் இருவரும் நல்ல பார்மில் இருந்ததால், துவக்கம் முதலே அடித்து நொறுக்கினர். 19.3 ஒவர்களில் 159 ரன்கள் எடுத்த நிலையில், ஜேசன் ராய் 82 ரன்களுக்கு அவுட் ஆனார். பிறகு ஹேல்ஸ் பார்ஸ்டாவ் இருவரும் மேலும் அதே அதிரடியை தொடர்ந்தார்கள். அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி வேகமாக சதம் மைல்கல்லை அடைந்தனர்.

ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து.. ட்விட்டரில் பாராட்டு மழை 3

பார்ஸ்டாவ் 92 பந்துகளில் 139 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அலெக்ஸ் ஹேல்ஸ் அதே 92 பந்துகளில் 147 எடுத்தனர். இருவரும் தலா 5 சிக்சர்கள் அடித்தனர். மேலும் இந்த இருவரும் சேர்ந்து 31 பவுண்டரிகள் விளாசினர். அதை தொடர்ந்து வந்த கேப்டன் மோர்கன் அதிரடி அரைசதம் விளாசி அணியை இமாலய இழக்கிற்க்கு இட்டு சென்றார். இறுதியில் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது. இதுதான் ஒருநாள் போட்டியில் ஒரு அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

 

https://twitter.com/RobWallace12/status/1009106102510936065

 

https://twitter.com/Nenorakam/status/1009116850158895104?s=19

https://twitter.com/iTheRider1/status/1006876164718301186?s=19

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *