பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய இந்தியா; ட்விட்டரில் ரசிகர்கள் கவலை !! 1
பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய இந்தியா; ட்விட்டரில் ரசிகர்கள் கவலை

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. தொடர் சமநிலை அடைந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய இந்தியா; ட்விட்டரில் ரசிகர்கள் கவலை !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா வெறும் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் அளித்தார்.

இதன் பிறகு தவான் 44 ரன்களும், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி 72 ரன்களும், எடுத்து ஓரளவிற்கு கைகொடுத்தாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய தோனியை(42) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறியதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 256 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய இந்தியா; ட்விட்டரில் ரசிகர்கள் கவலை !! 3

இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் முக்கியமான இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம் குறித்து இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் கவலை தெரிவித்து வருகின்றனனர்.

அதில் சில;

https://twitter.com/strangerr_18/status/1019218504438857729

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *