மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்டோக்ஸ் இல்லை !! 1
மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்டோக்ஸ் இல்லை

இந்தியாவுடனான 3-ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் முன்னணி ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம்பெறவில்லை.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-0 என முன்னிலை வகிக்கிறது. இருஅணிகளுக்கிடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி வரும் 18-ஆம் தேதி டிரென்ட் பிரிட்ஜில் தொடங்குகிறது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்டோக்ஸ் இல்லை !! 2

இந்த போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், அந்த அணியின் முன்னணி ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் பெயர் இடம்பெறவில்லை. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஸ்டோக்ஸ், பிரிஸ்டோல் வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்ததால் அவரால் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு பதிலாக அணியில் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டார்.

2-ஆவது போட்டியில் ஸ்டோக்ஸுக்கு பதிலாக களமிறங்கிய வோக்ஸ் 4 விக்கெட்டுகள், அறிமுக சதம் என அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம் அவர் 3-ஆவது டெஸ்ட் போட்டியில் தனது இடத்தை உறுதிபடுத்தினார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஸ்டோக்ஸ் இல்லை !! 3

இதற்கிடையில், பிர்ஸ்டோல் வழக்கு தொடர்பான விசாரணை புதன்கிழமை வரை இருப்பதால், அதன்பிறகே ஸ்டோக்ஸ் இடம் குறித்து முடிவு செய்யப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அதனால், 3-ஆவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை.

3-ஆவது டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணி:

அலெஸ்டர் குக், கீடன் ஜென்னிங்ஸ், ஜோ ரூட், ஓலி போப், ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், சாம் கரான், அடில் ரஷீத், ஸ்டுவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், மொயீன் அலி, ஜேமி போர்டர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *