குல்தீப் யாதவ்க்கு பயந்து, அவருக்கென தனியாக பயிற்சி செய்யும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 1

முதல் டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து பேட்டிங் வரிசையை நிலைகுலைய செய்த குல்தீப் யாதவ் பந்து வீச்சை சமாளிக்க புதிய யுக்திகளை கையாள்கிறது இங்கிலாந்து அணி.

மான்செஸ்டரில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

Kuldeep Yadav

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர் பட்லர் மற்றும் ஜேசன் ராய், 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹேல்ஸ் பெரிதாக ஒலிக்கவில்லை. மறுமுனையில் இருந்த பட்லர் வழக்கம் போல தனது அதிரடியை  தொடர்ந்தார்.

பின்னர் பந்துவிச வந்த குலதீப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஹேல்ஸ் அவுட் ஆனார். மீண்டும் 14வது ஓவரை வீச வந்த குலதீப் முதலில் அடிக்க முயற்சித்த மோர்கன் விக்கெட்டை வீழ்த்தினார். பிறகு ரூட் மற்றும் பார்ஸ்டோவ் இருவரையும் தோனி ஸ்டம்பிங் செய்து வெளியேற்றினார்.

தனது கடைசி ஓவரில் பட்லரின் விக்கெட்டினையும் வீழ்த்தினார். இறுதியாக 4 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இது டி20 போட்டியில் இவரது சிறப்பான பந்துவீச்சு ஆகும்.

குல்தீப் யாதவ்க்கு பயந்து, அவருக்கென தனியாக பயிற்சி செய்யும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 2

இங்கிலாந்து அணிக்கு நல்ல துவக்கம் அமைந்தாலும், 200 ரன்கள் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குலதீப் சூழலில் சிக்கி 160 ரன்களுக்குள் சுருண்டனர்.

இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில், பயிற்சியின் பொது மெர்லின் என்ற ரிஸ்ட்-ஸ்பின்னர் வைத்து பந்து வீச வைத்து பயிற்சி செய்து வருகின்றனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்.

இதுகுறித்து பயிற்சியாளர் கூறுகையில், இந்திய அணிக்கு பலமாக இருஓயாது ரிஸ்ட்-ஸ்பின்னர் தான். இதனால், பயிற்சியின் மெர்லின் என்ற ரிஸ்ட்-ஸ்பின்னர் வைத்து பந்து வீசி பயிற்ச்சி செய்து வருகிறோம். இதில் மேலும் சிறப்பு என்னவென்றால் ஐவரும் இடது கை பந்து வீச்சாளர். இது எண்களின் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு உதவியாக இருக்கும்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *