பிளேயிங் லெவெனில் அஸ்வினுக்கு இடம் கொடுப்பதற்கு பதிலாக குலதீப் க்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மூத்த சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்திய டெஸ்ட் அணியின் ப்ளெயின் லெவெனில் சரிவர சீர் திருத்தம் செத்தால் மட்டுமே நீடித்து ஆட முடியும். அதிக விக்கெட்டுகளை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர் குலதீப் இதுவரை இங்கிலாந்து மைதானத்தில் வருகிறார். இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெறவும் காரணமாக இருந்துள்ளார்.
முதல் டி20 போட்டியில் ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்.
அதனை தொடர்ந்து, முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசி 10 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதற்கு அடுத்த போட்டிகளில் ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தாலும் தேர்வுக்குழுவிற்கு இவரின் செயல்பாடு பிடித்துவிட்டது.

இதனால் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து தற்போது முன்னணி சுழற்பந்துவீச்சாளர்கள் மூவர் உள்ளனர்.
அவர்களில் அஸ்வின் வெளி நாடுகளில் இதுவரை சிறப்பாக செயல்படவில்லை. அவருக்கு பதிலாக குலதீப் யாதவ் அணியில் ஆடினால் சிறப்பாக இருக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஒரு ஸ்பின்னர் தேர்வு செய்ய வேண்டும் என்று வந்தால், நான் அணியில் குலதீப் யாதவை தேர்வு செய்வேன். அவர் இதுவரை நடந்த அணைத்து போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசியுள்ளார்.”

“கடைசி இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் கணித்து ஆட ஆரம்பித்தனர். இருந்தாலும், குலதீப் டெஸ்ட் அணியில் அச்சுறுத்தலாக செயல்படுவர் என எனக்கு தோன்றுகிறது. அஸ்வின் அல்லது குலதீப் என்றாலெனது விருப்பம் குலதீப் மீது தான் இருக்கும்.”