எனது 5 விக்கெட்டிற்கு காரணம் இஷாந்த் சர்மாவின் டிப்ஸ் தான்: ஹர்திக் பாண்டியா 1

’விமர்சகர்கள் எதையாவது பேசுவதற்கு சம்பளம் வாங்குகிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை’ என்று ஹர்திக் பாண்ட்யா கூறினார் மேலும் த்னது அபாரமான பந்துவீச்சிற்கு இசாந்த் சர்மாவின் டிப்ஸ் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்..

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸில் நடந்த 2 வது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை தழுவி, தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

 

எனது 5 விக்கெட்டிற்கு காரணம் இஷாந்த் சர்மாவின் டிப்ஸ் தான்: ஹர்திக் பாண்டியா 2

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இதில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா 6 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட்கள் சாய்ப்பது இதுவே முதல் முறை. இதையடுத்து இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஹர்திக் பாண்ட்யாவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் இந்திய சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் இங்கிலாந்து வீரர் ஹோல்டிங்கும் கடுமையாக விமர்சித்திருந்தனர். ’ஆல்ரவுண்டராக பாண்ட்யா செயல்படவில்லை, அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஆல் ரவுண்டர் டேக்கை நீக்க வேண்டும். அவரை கபில்தேவுடன் ஒப்பிடுவதையும் நிறுத்த வேண்டும். ஒரே நாள் இரவில் கபில்தேவ் ஆகிவிடமுடியாது. ஆல்ரவுண்டர் என்றால் இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் மாதிரி இருக்க வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார் ஹர்பஜன் சிங். நேற்றைய சிறப்பான பந்துவீச்சு மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஹர்திக் பாண்ட்யா.

 

எனது 5 விக்கெட்டிற்கு காரணம் இஷாந்த் சர்மாவின் டிப்ஸ் தான்: ஹர்திக் பாண்டியா 3

அவர் கூறும்போது, ’விமர்சகர்களுக்காக நான் விளையாடவில்லை. நான் நாட்டுக்காக விளையாடுகிறேன். விமர்சகர்கள் எதையாவது பேசுவதற்கு சம்பளம் வாங்குகிறார்கள். வாங்கும் சம்பளத்துக்கு எதையாவது பேசுவார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலையில்லை. அது எனக்கு தெரியவும் வேண்டாம். நாட்டுக்காக விளையாடுவது என் வேலை. நான் அதை சரியாக செய்கிறேன். எனது பங்களிப்பில் அணி மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுபோதும். ஐந்து விக்கெட் வீழ்த்தியது பற்றி கேட்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. பேட்டிங் செய்து நூறு ரன்கள் எடுப்பதை விட, அணி இக்கட்டான நேரத்தில் இருக்கும்போது 5 விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. எனது 5 விக்கெட்டிற்கு காரணம் இஷாந்த் சர்மாவின் டிப்ஸ் தான்: ஹர்திக் பாண்டியா 4

கபில்தேவுடன் ஒப்பிடுவது பற்றி கேட்கிறார்கள். எல்லாம் சரியாக இருந்தால் யாருடனாவது ஒப்பிடுகிறார்கள். ஏதாவது தவறாகிவிட்டால், ’அவர் போல் இல்லை, இவர் போல் இல்லை’ என்று பேசத் தொடங்கி விடுகிறார்கள். நான் அவருடன் என்னை ஒப்பிட்டதில்லை. நான் கபில்தேவ் ஆக, ஆசைப்பட்டதுமில்லை. நான் ஹர்திக் பாண்ட்யாவாக இருக்கிறேன்.

எனது 5 விக்கெட்டிற்கு காரணம் இஷாந்த் சர்மாவின் டிப்ஸ் தான்: ஹர்திக் பாண்டியா 5

அப்படியே இருந்துவிட்டு போகிறேன். அப்படித்தான் இந்திய அணிக்கு வந்தேன். 40 ஒரு நாள் போட்டிகளிலும் 10 டெஸ்ட் போட்டிகளிலும் ஹர்திக் பாண்ட்யாவாகத்தான் விளையாடி இருக்கிறேன். அவர் காலத்தில் கபில்தேவ் சிறந்த வீரர். என்னை யாருடனும் ஒப்பிட வேண்டாம். அப்படி ஒப்பிடாமல் இருந்தால் அதுவே மகிழ்ச்சி’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *