குக்கின் மோசமான ஆட்டத்திற்கு முட்டு கொடுக்கும் கேப்டன் ரூட்; "உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்" என புகழாரம்!! 1

இங்கிலாந்தின் கேப்டன் ஜோ ரூட் மூன்றாவது டெஸ்ட் போட்டியில்  இந்தியாவிற்கு எதிராக படுதோல்வி அடைந்த பிறகு, முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் சரிவர செயல்படவில்லை என்ற விமர்சனத்திற்கு பதில் அளித்து பேசியுள்ளார். 

கடந்த ஒரு வருடமாக இங்கிலாந்தின் பேட்டிங் துயரத்தில் இருந்து வருகிறது. காரணம் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் எனவும் பேசப்படுகிறது. 2017 ஆம் ஆண்டின் இறுதியில் ஆஷஸ் தொடரில் MCG மைதானத்தில் 244 ரன்களைக் குவித்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் குக் தனது விமர்சகர்களை மௌனமாக்க முடிந்தது. ஆனால் அதன்பிறகு அவரது ஆட்டம் மோசமான செயல்திறனைக் கொண்டிருக்கிறது.

குக்கின் மோசமான ஆட்டத்திற்கு முட்டு கொடுக்கும் கேப்டன் ரூட்; "உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்" என புகழாரம்!! 2
England’s Alastair Cook bats during day three of the Specsavers Second Test match at Lord’s, London. PRESS ASSOCIATION Photo. Picture date: Saturday August 11, 2018. See PA story CRICKET England. Photo credit should read: Anthony Devlin/PA Wire. RESTRICTIONS: Editorial use only. No commercial use without prior written consent of the ECB. Still image use only. No moving images to emulate broadcast. No removing or obscuring of sponsor logos.

இங்கிலாந்தின் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த வீரர் இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் மோசமான சராசரியை கொண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு அவர் துவங்கிய டெஸ்ட் வாழ்க்கையில் இந்த ஆண்டு தான் மிக மோசமான சராசரியான 19.00யை வைத்துள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரட்டை சதத்திற்கு பிறகு, 14 இன்னிங்ஸில் குக் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். இந்தியாவிற்கு எதிரான தொடரில் அவரது போராட்டங்கள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

 

 

 

குக்கின் மோசமான ஆட்டத்திற்கு முட்டு கொடுக்கும் கேப்டன் ரூட்; "உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்" என புகழாரம்!! 3
England Cricket Team’s former skipper Alastair Cook celebrating his century.

இந்த தொடரில், அவர் ஐந்து இன்னிங்ஸில் இருந்து 80 ரன்கள் மட்டுமே எடுத்தார், மேலும் அதிகபட்ச ஸ்கோராக 29 ரன்கள், சராசரியாக 16 ரன்களை வைத்துள்ளார்.
நான்காவது டெஸ்டில் குக் இடம்பெறுவது சந்தேகம் தான் காரணம் அவரது மனைவி  விரைவில் மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். மேலும், சூழ்நிலைகள் அவரை அனுமதித்தால் குக் விளையாடுவார். குக் இல்லாததால், ஆடுகளத்தில் இங்கிலாந்து அணிக்கு பெருத்த அடியாக இருக்கும். இது அவர்களின் துவக்க வீரர்களின் போராட்டங்களை இன்னும் கூடுதலான போராட்டமாக மாற்றும். கீட்டோன் ஜென்னிங்ஸ் இன்னும் தொடர்ந்து போராடி வருகிறார்.

ஆனால் இவற்றின் மத்தியில், ரூட் தனது மூத்த வீரருக்கு தனது ஆதரவைத் அளித்துள்ளார்.

“அவர் ஒரு உலக  தரம் வாய்ந்த பேட்ஸ்மேன். அவர் மீண்டும் மீீீண்டும் வந்து தன்னை ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறார். உண்மையில், நான் அவரை பற்றி நிறைய எழுத விரும்புகிறேன், ஏனென்றால் அவர் எழுதிய ஒவ்வொரு முறையும் அவர் திரும்பி வந்து, இரட்டைப் சதங்களை குவிக்கிறார்.

குக்கின் மோசமான ஆட்டத்திற்கு முட்டு கொடுக்கும் கேப்டன் ரூட்; "உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்" என புகழாரம்!! 4
BIRMINGHAM, ENGLAND – AUGUST 01: Joe Root of England looks on prior to Day One of the Specsavers 1st Test match between England and India at Edgbaston on August 1, 2018 in Birmingham, England. (Photo by Gareth Copley/Getty Images)

“நாங்கள் இந்த விஷயங்களை பற்றி யதார்த்தமாக இருக்க வேண்டும். நீங்கள் இரு தரப்பினரையும் பார்த்தீர்களேயானால், இரண்டு அணியின் துவக்க வீரர்களும் போராடியிருக்கின்றன, அது சவுத்தாம்ப்டனில் நீங்களே பார்த்தீர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது அவருக்கு அதிக அனுபவமும் இருக்கின்றன. எனவே, அந்த விளையாட்டிற்கு செல்லும் எல்லாவற்றையும் அவர் கேட்டுக் கொண்டிருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன், அவரே சிறந்த வாய்ப்பாக கொண்டு அவரை பரிசித்துக்கொள்வார்” என்று ரூட் கூறினார்.

குக்கின் மோசமான ஆட்டத்திற்கு முட்டு கொடுக்கும் கேப்டன் ரூட்; "உலக தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்" என புகழாரம்!! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *