சதம் அடித்து இந்திய அணிக்கு கைகொடுத்த ரிஷப் பண்ட்; ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள் !! 1

சதம் அடித்து இந்திய அணிக்கு கைகொடுத்த ரிஷப் பண்ட்; ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள்

இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சதம் அடித்து இந்திய அணிக்கு கைகொடுத்த ரிஷப் பண்ட்; ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள் !! 2

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணிக்கு 464 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சியாக ஷிகர் தவான் 1 ரன்னிலும், கோஹ்லி மற்றும் புஜாரா ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

இதனையடுத்து களமிறங்கிய ரஹானே , கே. எல் ராகுலுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 106 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த ரஹானே மொய்ன் அலி பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், பின்னர் வந்த விஹாரி ரன் எதுவும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார்.

சதம் அடித்து இந்திய அணிக்கு கைகொடுத்த ரிஷப் பண்ட்; ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள் !! 3

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடர்ந்து நிதானமாக விளையாடிய கே.எல் ராகுலுடன், ரிஷப் பண்ட் கூட்டணி சேர்ந்தார்.

போட்டியின் தன்மையை உணர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்த ஜோடி இங்கிலாந்து அணியை திணறடித்து வருகிறது. கே.எல் ராகுல் முதலில் சதமடிக்க அடுத்த சிறிது நேரத்தில் ரிஷப் பண்டும் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை மாஸாக பதிவு செய்துள்ளார்.

சதம் அடித்து இந்திய அணிக்கு கைகொடுத்த ரிஷப் பண்ட்; ட்விட்டரில் குவியும் வாழ்த்துக்கள் !! 4

 

 

கடந்த போட்டிகளில் சொதப்பல் ஆட்டத்தால் கடும் விமர்ச்சனங்களை சந்தித்து வந்த ரிஷப் பண்ட் இந்த ஒரே போட்டியின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பாராட்டையும் பெற்றுள்ளார். சமூக வலைதளங்கள் மூலம் ரிஷப் பண்ட் மற்றும் கே.எல் ராகுலிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

https://twitter.com/pandyawarrior/status/1039532575298019328

https://twitter.com/swing_seam/status/1039528316007403521

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *