கோலியின் கேபிடன்சியில் 3-2 என இந்திய வெல்வது எளிது : சேவாக் நம்பிக்கை 1
I am really shocked to see the scheduling because which country plays back-to-back cricket matches these days? There was a gap of two days in between the T20 matches in England and here you are playing ODIs under hot Dubai weather and that too without a break. So, I don’t think this is a correct scheduling

முன்னாள் இந்திய அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தற்போது இங்கிலாந்து பற்றி பேசியுள்ளார் அதாவது தற்போதைய கேப்டன் விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் தலைமையில் இது சாத்தியம் எனவும் கூறியுள்ளார்

சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் காயமடைந்து இருப்பதால் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

கோலியின் கேபிடன்சியில் 3-2 என இந்திய வெல்வது எளிது : சேவாக் நம்பிக்கை 2
NOTTINGHAM, ENGLAND – AUGUST 22 : Virat Kohli of India leaves the field after India won the 3rd Specsavers Test Match between England and India at Trent Bridge on August 22, 2018 in Nottingham England. (Photo by Philip Brown/Getty Images)

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி சவுதாம்டனில் நடக்கிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ஆடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

 

இங்கிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பு எஸ்செக்ஸ் அணியுடன் நடந்த பயிற்சி ஆட்டத்தின்போதே அஸ்வின் வலது கையில் காயமடைந்திருந்தார். காயம் பெரிதாகிவிடக் கூடாது என்பதற்காக பயிற்சி ஆட்டத்தில் அவர் ஈடுபடவில்லை.

பின்னர் குணமாகி ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. அந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் காயத்துடனேயே ஆடினார். அவர் வலியில் தவிப்பதையும் பார்க்க முடிந்தது. இதனால் அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆடுவாரா என்பது கேள்விக் குறியாகி உள்ளது.

கோலியின் கேபிடன்சியில் 3-2 என இந்திய வெல்வது எளிது : சேவாக் நம்பிக்கை 2
NOTTINGHAM, ENGLAND – AUGUST 22 : Virat Kohli of India leaves the field after India won the 3rd Specsavers Test Match between England and India at Trent Bridge on August 22, 2018 in Nottingham England. (Photo by Philip Brown/Getty Images)

 

இதுபற்றி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறும்போது, ‘அடுத்த போட்டிக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. அதற்குள் அவர் குணமாகிவிடுவார் என்று நம்புகிறோம். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் அவர் குணமாகி வருகிறார்’ என்றார்.

இருந்தாலும் 28-ம் தேதி சவுதாம்டனில் நடக்கும் வலை பயிற்சியின்போதுதான் அஸ்வின் உடல் நலம் பற்றிய முழு விவரமும் தெரியவரும். அதற்கு பிறகே அவர் அணியில் சேர்க்கப்படுவாரா இல்லையா என்று முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *