ஹர்திக் பாண்டியாவை சரியாக பயன்படுத்த வேண்டும்;
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில், பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் மிக சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை இந்திய அணி, இந்த தொடரில் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. பந்துவீச்சில் குறைவான ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து, முக்கிய விக்கெட்டுகளை அசால்டாக கைப்பற்றகூடியவரான ஹர்திக் பாண்டியாவிற்கு, கடந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்தே மொத்தம் 10 ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது, அதில் அவர் வெறும் 50 ரன்கள் விட்டுகொடுத்திருந்தாலும், லிவிங்ஸ்டன், ஜேசன் ராய் போன்ற முக்கிய வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றினார். எனவே அடுத்த போட்டியில் பும்ராஹ், முகமது ஷமி மற்றும் சாஹல் ஆகியோரை போன்று ஹர்திக் பாண்டியாவிற்கும் அதிகமான ஓவர்கள் கொடுக்கப்பட வேண்டும், இது இந்திய அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.