இங்கிலாந்து அணியுடனான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெறும் டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ளது. அதன்பிறகு மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடர் ஜூலை 7,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டி முடிந்த இரு தினங்களில் டி.20 தொடரின் முதல் போட்டி நடைபெறுவதால், இந்திய வீரர்களின் பனிச்சுமையை குறைப்பதற்காக முதல் டி.20 போட்டியில், சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய, ஹர்திக் பாண்டியா தலைமையிலானே அதே இந்திய அணி, இங்கிலாந்து அணியுடனான முதல் டி.20 போட்டியில் விளையாடும், அடுத்த இரண்டு டி.20 போட்டியில் வழக்கமான சீனியர் வீரர்கள் விளையாடுவார்கள் என தகவல்கள் வெளியாகிருந்த தகவல்களின்படியே மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடருக்கு, இரண்டு அணிகளை பிசிசிஐ., தேர்வு செய்து அறிவித்துள்ளது. முதல் டி.20 போட்டிக்காக இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய அணியை பிசிசிஐ., தேர்வு செய்துள்ளது. அடுத்த இரண்டு டி.20 போட்டிகளுக்கு வழக்கமான வீரர்களை கொண்ட அணியை பிசிசிஐ., தேர்வு செய்து அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியில் விளையாடாததால் அவரே முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியையும் வழிநடத்த உள்ளார். முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ஹர்சல் பட்டேல், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக் போன்ற இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

கடைசி இரண்டு டி.20 போட்டிகளுக்கான இந்திய அணியில் விராட் கோலி, பும்ராஹ், ஸ்ரேயஸ் ஐயர் போன்ற வழக்கமான வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.
முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ரவி பிஸ்னோய், புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், ஆவேஸ் கான், அர்ஸ்தீப் சிங், உம்ரன் மாலிக்.
இரண்டு மற்றும் மூன்றாவது டி.20 போட்டிகளுக்கான இந்திய அணி;
ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ரவி பிஸ்னோய், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், புவனேஷ்வர் குமார், ஆவேஸ் கான், ஹர்சல் பட்டேல், உம்ரன் மாலிக்.