இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு 1

இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையே நடக்க இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில புதிய வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

ஆஃப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுடனான கிரிக்கெட் தொடருக்கு பிறகு ஜூலை மாதம் இங்கிலாந்திற்கு செல்லும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு 2

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை 5-0 என்ற கணக்கில் தொடரை வென்று வெள்ளையடித்து வீட்டுக்கு அனுப்பியது. டி20 போட்டியிலும் விட்டு வைக்கவில்லை. அதிலும் வென்று ஒரு வெற்றி கூட பெற விடாமல் தோற்கடித்தது.

இந்நிலையில் இந்திய அணியுடன் முதலில் நடைபெற உள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் க்கு மீண்டும் இடம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு 3

காயம் காரணமாக பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆடவில்லை. அணியில் இடம்பெற்றாலும் வெளியிலேயே அமர்த்தப்பட்டிருந்தார். தற்போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

சாம் பில்லிங்ஸ், சாம் கர்ரன் இருவருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆட அவ்வளவாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தற்போது இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம் கொடுக்க பட்டுள்ளது.

கிறிஸ் வோக்ஸ் க்கு இடம் இல்லை 

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு 4

இந்த மாதம் துவக்கத்தில் கணுக்கால் வலியால் அவதிப்பட்டு வரும் வோக்ஸ் இன்னும் குணமடையாததால் இம்முறை அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு,அவருக்கு பதிலாக ஜேக் பால் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்பின் ஜோடியான அடில் ரஷீத், மொயின் அலி இருவரும் இடம் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி 

அயன் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜோனாதன் பார்ஸ்டோவ், ஜாக் பால், ஜோஸ் பட்லர், டாம் குர்ரான், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்குட், அடில் ரஷிட், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வூட்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *