ஜூலை மாதம் முதல் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் துவங்க இருக்கிறது. பலம்வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது இந்திய அணி. இதற்க்கு ஒருநாள் போட்டி அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
ஆகஸ்ட் மதம் துவங்க இருக்கும் டெஸ்ட் போட்டியில், 4 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் இரு அணிகளும் மோத இருக்கின்றன. இதற்க்கான இந்திய அணி முன்னதாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து சார்பில் டெஸ்ட் அணி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
நேற்றைய தினம் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சாம் பில்லிங்ஸ், சாம் கர்ரன் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் உடல்தகுதி பரிசோதனை இருப்பதால் இன்னும் முழுமையாக சேர்க்கப்படவில்லை. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.
பிராட் க்கு இடம் சந்தேகம்
கவுண்டி போட்டிகளில் நாட்டிங்காம்சைர் மற்றும் ஒர்ஸ்ஸ்டேர்ஷிட் அணிக்கு இடையான போட்டியில் பிராட் பந்துவீசுகையில் கணுக்காலில் அடிபட்டு போட்டி நடுவே வெளியேறினார்.
இதனால் இந்தியா க்கு எதிரான போட்டியில் ஒரு சேஷனில் மட்டும் தான் பந்துவீச முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது இங்கிலாந்த்துக்கு பெருத்த அடியாக இருக்கும்.
32 வயதாகும் பிராட் 118 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ளார். மொத்தம் 417 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவரது சிறப்பான பந்துவீச்சு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 15 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தியது தான்.
ஆண்டர்சன் மற்றும் பிராட் இருவரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் இங்கிலாந்து அணி பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது.