டி20 போட்டியில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய அணி, முதல் இடத்தை பெற இங்கிலாந்து தொடரை வெல்வது மிக முக்கியம். மேலும், ஜிம்பாப்வே முத்தரப்பு தொடரும் சாதகமாக அமைய வேண்டும்.
இந்திய அணி ஜூலை 3ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியுடன் மோத இருக்கிறது. இதற்க்கு முன்பு அயர்லாந்து அணியுடன் நடந்த 2 போட்டிகள் கொண்ட தொடரில் வென்று தொடரை கைப்பற்றியது.
அயர்லாந்து அணியுடன் முதல் போட்டியில் 76 ரன்கள் வித்தியாசத்தில், இரண்டாம் போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆட காத்திருக்கிறது.
டி20 போட்டிக்கான தரவரிசை
அயர்லாந்து உடனான தொடருக்கு பின்பு ஐசிசி டி20 போட்டிக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில், பாக்கிஸ்தான் அணி அசைக்க முடியாத முதலிடத்தில் உள்ளது. இதையா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டாவது மூன்றாவது இடத்தில உள்ளன.
பும்ரா இல்லாதது பின்னடைவா?

பும்ரா மற்றும் சுந்தர் இருவரும் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுவிட்டனர். இவர்களுக்கு பதிலாக தீபக் சஹார் மற்றும் க்ருனால் பாண்டியா இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பவர்பிளே ஓவர்களில் சிறப்பிக்க பந்து வீசிய தீபக் சஹர் இம்முறை இந்திய அணிக்காக சேர்க்கப்பட்டுள்ளது பலம் சேர்க்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதுவரை ஐபில் போட்டிகளில் கலக்கி வந்த க்ருனால் முதல்முறையாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மறுமுனையில், இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்க்கும் வகையில், ஹேல்ஸ், ஜேசன் ராய், பட்லர் மூவரும் நல்ல நிலையில் உள்ளனர். இந்திய அணி முதலிடம் பிடிக்க இந்த தொடரை வென்றே ஆக வேண்டும்.
மேலும், ஜிம்மபவே, ஆஸ்திரேலியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் ஆடிவரும் முத்தரப்பு தொடரும் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தால் முதலிடம் நிச்சயம் இந்திய அணிக்கு தான்.
முத்தரப்பு தொடரில் ஜிம்பாப்வே அணி வெற்றிகளை குவித்தால் புள்ளிவரிசையில் இந்திய அணி முன்னிலை பெரும்.