இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அடுத்ததாக நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று மாலை நடைபெற உள்ளது.

லண்டனில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில், துவக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை விராட் கோலி விளையாடாவிட்டா மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் களமிறங்குவார்கள்.
ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கே இடம் கிடைக்கும். பந்துவீச்சாளர்களாக முகமது ஷமி, பிரசீத் கிருஷ்ணா, பும்ராஹ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி/ ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பும்ராஹ், முகமது ஷமி, பிரசீத் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.