தீபக் ஹூடாவிற்கு இடம் இல்லை..? இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்போம்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை (9ம் தேதி) நடைபெற உள்ளது.

தீபக் ஹூடாவிற்கு இடம் இல்லை..? இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த விராட் கோலி, பும்ராஹ், ரிஷப் பண்ட் போன்ற சீனியர் வீரர்கள் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள். இதனால் தீபக் ஹூடா போன்ற வீரர்களுக்கு இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என தெரிகிறது.

தீபக் ஹூடாவிற்கு இடம் இல்லை..? இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

பேட்ஸ்மேன்களாக ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது. சூர்யகுமார் யாதவ் மிக சிறப்பாக விளையாடி வருவதால் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதல் டி.20 போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது. ஆல் ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியாவிற்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். ரவீந்திர ஜடேஜாவிற்கு இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.

தீபக் ஹூடாவிற்கு இடம் இல்லை..? இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 4

வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ராஹ், புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல் ஆகியோருக்கும், சுழற்பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹலுக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என தெரிகிறது.

இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், பும்ராஹ், புவனேஷ்வர் குமார், ஹர்சல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *