முக்கிய வீரருக்கு இடம் இல்லை... ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 1

இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து பார்ப்போம்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி (கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த போட்டி), மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

முக்கிய வீரருக்கு இடம் இல்லை... ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 2

இதில் முதலில் நடைபெறும் இரு அணிகள் இடையேயான டெஸ்ட் போட்டி ஜூலை 1ம் தேதி துவங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த அணிகளான இந்தியா இங்கிலாந்து இடையேயான இந்த டெஸ்ட் போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

முக்கிய வீரருக்கு இடம் இல்லை... ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 3

இந்த போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் சில கட்டாயம் மாற்றங்களுடன் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ரோஹித் சர்மா ஐந்தாவது போட்டியில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக ஜஸ்பிரிட் பும்ராஹ் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா விலகியுள்ளதால் சுப்மன் கில்லுடன் இணைந்து புஜாரா இந்திய அணிக்கு துவக்கம் கொடுப்பார் என தெரிகிறது.

முக்கிய வீரருக்கு இடம் இல்லை... ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! 4

மிடில் ஆர்டரில் ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெறுவார்கள். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருக்கு இடம் கிடைக்கும் என தெரிகிறது, இதனால் ரவிச்சந்திர அஸ்வினுக்கு ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இடம் கிடைக்காது என்றே தெரிகிறது.

வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் பும்ராஹ் ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ராஹ் (கேப்டன்).

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *