ஜூன் மாத இறுதியில் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதோடு, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க உள்ளது.
ஜூலை 1ம் இந்தியா இங்கிலாந்து இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி துவங்க உள்ள நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் எதிர்பார்க்காத 3 வீரர்கள் இந்திய அணியின் ஸ்க்வாடில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்த 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்
பிரசித் கிருஷ்ணா
இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சர்வதேச கிரிக்கெட் தொடரில் 7 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவர் இன்னும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி விளையாடவில்லை.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திருக்கும் இவருக்கு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வாய்ப்பு கொடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது. டெஸ்ட் தொடர் என்பது மற்ற போட்டிகள் போன்று அவ்வளவு எளிதாக இருக்காது என்பது தெரிந்தும் இவருக்கு ஏன் இந்திய அணி வாய்ப்பு கொடுத்தது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
