மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்; அடுத்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு !! 1
மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்; அடுத்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

தென் ஆப்ரிக்கா அணியுடனான எதிர்வரும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

ஜனவரி மாதம் 27, 29 மற்றும் பிப்ரவி 1 ஆகிய தேதிகளில், இங்கிலாந்து – தென் ஆப்ரிக்கா இடையேயான ஒருநாள் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கும் ஜோஃப்ரா ஆர்ச்சர்; அடுத்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு !! 2

காயம் காரணமாக கடந்த பல மாதங்களாக அவதிப்பட்டு வரும் அசுரவேகப்பந்து வீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சர் தென் ஆப்ரிக்கா தொடருக்கான இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஹாரி ப்ரூக், டேவிட் மாலன், ஜேசன் ராய் போன்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளனர்.

அதே போல் மொய்ன் அலி, ஹாரி ப்ரூக், சாம் கர்ரான், அடில் ரசீத், டேவிட் வில்லே போன்ற வீரர்களும் தென் ஆப்ரிக்கா அணியுடனான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்ரிக்கா தொடருக்கான இங்கிலாந்து அணி;

ஜாஸ் பட்லர், மொய்ன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹாரி ப்ரூக், சாம் கர்ரான், பென் டக்கர், டேவிட் மாலன், அடில் ரசீத், ஜேசன் ராய், பில் சால்ட், ஓலி ஸ்டோன், ரீஸ் டாப்லே, டேவிட் வில்லே, கிரிஸ் வோக்ஸ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *