உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டிய நிலையில் உள்ளது. இந்த போட்டி முடிவடைந்தவுடன் ஜூலை மாதம் முழுவதும் இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்தில் ஓய்வு எடுப்பார்கள்.
அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி எளிதாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி விடும் என்று பலர் கூறி வரும் நிலையில், இங்கிலாந்து முன்னாள் ஜாம்பவான் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் அலெஸ்டர் குக் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்த தடுமாறும் என்று கூறியிருக்கிறார்.
கடந்த முறை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதியது
2007ஆம் ஆண்டு கடைசியாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வைத்து 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

அந்தத் தொடரில் இந்திய அணி சார்பில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஜாஹிர் கான் மிக சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் கை கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு பிறகு தற்போது வரை டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த தவறியுள்ளது. குறிப்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 4-1 என்கிற கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி அடைந்தது. அந்தத் தொடரில் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி அலஸ்டேர் குக் மிக அற்புதமாக விளையாடி சதம் அடித்தது குறிப்பிடதக்கது.
அந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் ஒரே ஒரு ஆறுதல், அந்த தொடரில் அதிக ரன்களை விராட் கோலி குவித்தார். விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி அந்த தொடரில் 593 ரன்கள் குவித்து இருந்தார். அதேபோல இஷாந்த் சர்மா மிகச் சிறப்பாக பந்துவீசி 18 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து விடுவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது
இந்நிலையில் ஜாம்பவான் வீரர் அலஸ்டேர் குக், இந்திய அணி கடந்த சில வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக விளையாடி வருகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்து அணியை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. 2007 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற ஜாஹிர் கான் மிகப்பெரிய அளவில் கைகொடுத்தார். அற்புதமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியை மிகச் சிறப்பாகக் கையாண்டார்.

ஆனால் அதன் பிறகு இந்திய அணி இங்கிலாந்தில் வைத்து இங்கிலாந்து அணியை வீழ்த்த ஒவ்வொரு முறையும் தவறியது. தற்போது நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி அவ்வளவு எளிதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி கொள்ள முடியாது.
இங்கிலாந்து வீரர்கள் இங்கிலாந்து மைதானங்களில் நிறைய போட்டிகள் விளையாடி இருக்கிறார்கள். நடக்க இருக்கின்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் அனுபவமும் மறுபக்கம் இந்திய அணியின் பலமும் ஒருசேர சந்திக்கப் போகிறது. என்னைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி போராட வேண்டியிருக்கும் என்று அலஸ்டேர் குக் தன்னுடைய கருத்தை கூறி முடித்தார்.