உலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றுகள் முடிவடைந்து காலிறுதி போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் சுவீடனை வென்று எளிதாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

அதிர்ச்சியளித்த நாக் அவுட் சுற்று
உலகக் கோப்பையில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கின. தற்போது காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டியுள்ளன. உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடுகின்றன.
முன்னணி அணிகளாக கருதப்பட்ட ஸ்பெயின், அர்ஜென்டினா மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் நாக் அவுட் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது
பிரேசில் வெளியேற்றம்
நேற்று நடந்த முதல் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் உருகுவே அணியை வென்றது.
மற்றொரு ஆட்டத்தில் கோப்பையை வெல்லும் என நம்பப்பட்ட பிரேசில் அணி, பெல்ஜியம் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்து அதிர்ச்சிகரமான வெளியேறியது.

இந்தநிலையில், இன்று நடைபெற்றமுதல் காலிறுதி போட்டியில் சுவீடன் மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் மோதின. போட்டியின் முதல் பாதியில் 30வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மகிரே தலையில் முட்டி கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் 58வது நிமிடத்தில் டேலி அல்லி ஒரு கோலடித்து இங்கிலாந்து அணிக்கு மேலும் வலுசேர்த்தார். 90 நிமிடங்கள் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஸ்வீடனை வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.