இது இல்லை என்றால் கிரிக்கெட் என்ற விளையாட்டே இல்லாமல் போய்விடும்; இயான் மோர்கன் !! 1
இது இல்லை என்றால் கிரிக்கெட் என்ற விளையாட்டே இல்லாமல் போய்விடும்; இயான் மோர்கன்

புது புது விசயங்களை கண்டுபிடிக்க வில்லை என்றால் கிரிக்கெட் என்ற விளையாட்டே இல்லாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இது இல்லை என்றால் கிரிக்கெட் என்ற விளையாட்டே இல்லாமல் போய்விடும்; இயான் மோர்கன் !! 2

கிரிக்கெட் போட்டி காலத்திற்கு ஏற்ப புதுப்புது வடிவில் உருவாக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக நடைபெற்று வந்த டெஸ்ட் கிரிக்கெட், காலத்திற்கு ஏற்ப மாறி 50 ஒவர் போட்டியாக நடத்தப்பட்டது. தற்போது 50 ஓவர் போட்டி டி20 ஆட்டமாக சுருங்கியுள்ளது. டி20 போட்டிக்கு சர்வதேச அளவில் பிரமாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது. கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளும் டி20 லீக் தொடரை நடத்த ஆர்வம் காட்டி வருகிறது. இதில் ஐபிஎல், பிக் பாஷ், கரீபியன் டி20 லீக் பிரபலம் அடைந்துள்ளது.

இது இல்லை என்றால் கிரிக்கெட் என்ற விளையாட்டே இல்லாமல் போய்விடும்; இயான் மோர்கன் !! 3

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 100 பந்துகள் போட்டி என்பதை முன்மொழிந்துள்ளது. 2020-ல் இருந்து 100 பந்து போட்டித் தொடரை நடத்த முடிவு செய்துள்ளது.

இந்த போட்டியால் பாரம்பரிய விளையாட்டான டெஸ்ட் போட்டி அழிந்துவிடும் என முன்னாள் வீரர்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டனான இயான் மோர்கன் 100 பந்து போட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது இல்லை என்றால் கிரிக்கெட் என்ற விளையாட்டே இல்லாமல் போய்விடும்; இயான் மோர்கன் !! 4

இதுகுறித்து இயான் மோர்கன் கூறுகையில் ‘‘100 பந்து போட்டிகள் போன்ற புதுப்புது கிரிக்கெட்டுக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால்தான் கிரிக்கெட் அழிந்து விடும். பாரம்பரியமான கவுன்டி சாம்பியன்ஷிப், சர்வதேச டேஸ்ட் போட்டிகள் அச்சப்படத் தேவையில்லை.

இது வித்தியாசமான. இதுபோன்ற வித்தியாசமான கண்டுபிடிப்புகள் மிகவும் சிறந்தது. வித்தியாசமான தயாரிப்புகளை கிரிக்கெட்டைத் தாண்டியுள்ள மக்களிடம் எளிதாக சென்றடைய வைக்க முடியும்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *