இங்கிலாந்து ரசிகர்களுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டலடித்த டெய்லர் !! 1
England Cricket's die-hard fan group 'Barmy Army' posted a video on their Twitter handle where Tayor can be hurriedly seen giving autographs to the fans between overs.

இங்கிலாந்து ரசிகர்களுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டலடித்த டெய்லர்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தண்டனை அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய வீரர்களை இங்கிலாந்து ரசிகர்களுடன் சேர்ந்து நியூசிலாந்து வீரரும் கிண்டல் செய்தார என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இதைத் தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா என்பது சமூக ஊடகங்களில் சர்ச்சையாக மாறியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஓவல் மைதானத்தில் 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இங்கிலாந்து அணியினருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டமான ‘பாரி ஆர்மி’ என்ற பிரிவினரும் இதில் கலந்து கொண்டு போட்டியை உற்சாகப்படுத்தினார்கள்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்மித், வார்னர், 12 மாதங்கள் தடையும், பான்கிராப்ட் 9 மாதங்கள் தடையும் பெற்றுள்ளனர். இந்த விவகாரம் அந்த நாட்டு அணிக்கும், நாட்டினருக்கும் தலைகுனிவாக இருந்தாலும், பரம்பரை வைரியான இங்கிலாந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே இருந்து வருகிறது.

இங்கிலாந்து ரசிகர்களுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டலடித்த டெய்லர் !! 2

அந்தக் கொண்டாட்டம் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இங்கிலாந்து, நியூசிலாந்து டெஸ்ட் போட்டியிலும் எதிரொலித்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களைப் போல் உடை அணிந்து வந்திருந்த பாரி ஆர்மி ரசிகர் குழுவினர், கையில் ‘சான்ட் பேப்பர்’(பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்த பயன்படுத்த அட்டை) வைத்திருந்து தங்களை அடையாளப்படுத்தினார்கள்.

ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டல் செய்தும், அவர்களின் செயலை விமர்சனம் செய்து கோஷமிட்டும் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

இதற்கிடையே மைதானத்தில் பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லரிடம் ரசிகர்கள் ‘மஞ்சள் நிற சாண்ட் பேப்பரை’ கொடுத்து ஆட்டோகிராப் கேட்டனர். அதற்கு அதை பெற்றுக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டல் செய்துவிட்டுச் சென்றார்.

ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டல் செய்யும்விதமாக இங்கிலாந்து ரசிகர்கள் ‘சான்ட் பேப்பரை’ கொடுத்தபோது, அதை மகிழ்ச்சியுடன் பெற்று ரோஸ்டெய்லர் கையொப்பம் இட்டது தெரிந்து செய்த செயலா அல்லது தெரியாமல் செய்தாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் ஓடுகிறது.

இங்கிலாந்து ரசிகர்களுடன் சேர்ந்து ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டலடித்த டெய்லர் !! 3
England Cricket’s die-hard fan group ‘Barmy Army’ posted a video on their Twitter handle where Tayor can be hurriedly seen giving autographs to the fans between overs.

ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டல் செய்யும்விதமாக இங்கிலாந்து ரசிகர்கள் ‘சான்ட் பேப்பரை’ கொடுத்தபோது, அதை மகிழ்ச்சியுடன் பெற்று ரோஸ்டெய்லர் கையொப்பம் இட்டது தெரிந்து செய்த செயலா அல்லது தெரியாமல் செய்தாரா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் ஓடுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *