இந்த பையன கூப்பிடுங்க.. கண்டிப்பா உலகக்கோப்பை வாங்கி கொடுப்பான் - பிரபல வீரரை சீண்டிய இங்கிலாந்து ஜாம்பவான்! 1

இவர் அணியில் இடம் பெற்று இருந்தால் நிச்சயம் இந்த அணி உலக கோப்பையை வென்று இருக்கும் என சமூக வலைதளங்களில் பிரபல இங்கிலாந்து ஜாம்பவான்கள் சிலர் கருத்து தெரிவித்த சம்பவம் அனைத்து ரசிகர்களையும் நகைப்பூட்டியது.

ஜூலை மாதம் நடந்து முடிந்த 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பெரும் சர்ச்சையில் முடிந்தாலும், இங்கிலாந்து அணி முதல் முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.

இந்த பையன கூப்பிடுங்க.. கண்டிப்பா உலகக்கோப்பை வாங்கி கொடுப்பான் - பிரபல வீரரை சீண்டிய இங்கிலாந்து ஜாம்பவான்! 2
LONDON, ENGLAND – JULY 14: Ben Stokes of England acknowledges the crowd after victory during the Final of the ICC Cricket World Cup 2019

இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியில் மற்ற வீரர்கள் சொதப்பிய நிலையில், பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இறுதிவரை நின்று அணிக்கு வெற்றியை உறுதி செய்தார். இதனால் இவருக்கு அச்சமயம் பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் ரஃபி போட்டியின் உலக கோப்பை நடைபெற்றது. அதன் இறுதிப் போட்டியில் முதல் முறையாக இறுதிப் போட்டி வரை முன்னேறிய இங்கிலாந்து அணியும், சவுத் ஆப்பிரிக்கா அணியும் பலப்பரீட்சை மேற்கொண்டன.

இந்த பையன கூப்பிடுங்க.. கண்டிப்பா உலகக்கோப்பை வாங்கி கொடுப்பான் - பிரபல வீரரை சீண்டிய இங்கிலாந்து ஜாம்பவான்! 3
England’s Ben Stokes watches the ball after playing a shot during the 2019 Cricket World Cup group stage match between England and Sri Lanka at Headingley in Leeds

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சவுத் ஆப்பிரிக்கா அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதால், இங்கிலாந்து அணியால் மீண்டுவர இயலவில்லை. இதனால், இறுதியில் 12-32 என உலக கோப்பையை இங்கிலாந்து அணி பறிகொடுத்தது.

இங்கிலாந்து அணி உலக கோப்பையை இழந்த சோகத்தில் ரசிகர்கள் இருந்தனர். அப்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் செய்த ட்வீட்டுகளால், ரசிகர்களிடையே நகைச்சுவையாக நிலவியது.

அதில் ரஃபி அணியில் பென் ஸ்டோக்ஸ் செய்ய ஏன் சேர்க்கவில்லை?, அவர் இருந்திருந்தால் நிச்சயம் கோப்பையை வென்று தந்திருப்பார் என கிண்டல் அடித்தனர். முதலில் ஒருவர் ஆரம்பிக்க இதைத்தொடர்ந்து மற்றவர்களும் இதை பிடித்துக்கொண்டு தொடர்ந்து கிண்டல் அடிக்கத் துவங்கினர்.

வழக்கமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ், இதுகுறித்து தற்போது வரை எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், மற்ற பிரபலங்கள் இதை கவனித்து அவர்களும் கிண்டல் அடிக்கத் துவங்கியது பெரும் நகைச்சுவையாக இருந்தது. அவற்றில் சில இதோ

https://twitter.com/Campbell_simm/status/1190571364945674240

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *